Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்

கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
ஏன்? எதற்கு? எப்படி? என்று யாரையும், எதையும், எப்போதும் கேள்வி எழுப்பச் சொல்லி பழக்கிவிட்டுப் போயிருக்கிறார் தந்தை பெரியார். அவரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமோ, கேள்வி எழுப்பியதாலேயே ஓர் உதவி பேராசிரியரை சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் துயரம். எல்லாமே தலைகீழ் விகிதமாக மாறிப் போயிருந்த அல்லது அதுவே ஒழுக்கமாகிவிட்ட ஒரு பல்கலையில், ஓர் இளைஞன் நுழைந்தான். தான் கற்றுவந்த ஆகச்சிறந்த நெறிகளை இங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று நினைத்ததுதான் அந்த இளைஞன் செய்த ஒரே குற்றம்.   ஒரு மூத்த பேராசிரியர் வகுப்பிற்குள் நுழைகிறார். ஏதோ கேள்வி கேட்கிறார். ஒரு மாணவி, இருக்கையில் அமர்ந்தபடியே பதில் அளிக்கிறாள். அதற்கு அந்த பேராசிரியரோ, 'ஏன்மா... இதுதான் நீ ஆசிரியருக்கு தரும் மரியாதையா? உட்கார்ந்துட்டே பதில் சொல்ற?,' என அதிகாரமாய் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி
சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை சிண்டிகேட் தீர்மானத்தை முன்கூட்டியே வெளியிட்ட உதவி பேராசிரியரை பழிதீர்க்க, பட்டியல் சமூக மாணவி மூலம் பாலியல் புகாரில் சிக்க வைக்கும் பல்கலை நிர்வாகத்தால் ஆசிரியர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.   சேலத்தை அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலையுடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன.   பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல், தேர்வில் தில்லுமுல்லு, கவுண்டர் சமூக ஆதிக்கம், காவி அரசியலுக்கு ஆதரவு என பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலை மீது, அண்மையில் கிடைத்த ஏ++ அங்கீகாரம் சற்றே நன்மதிப்பைக் கூட்டியது. ஆனால், நடுநிலையாக இருக்க வேண்டிய பல்கலை நிர்வாகமே, ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில
முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

முடிவுக்கு வந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு; முதல் குற்றவாளி யுவராஜிக்கு இறுதிமூச்சு வரை சிறைவாசம்!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், முதல் குற்றவாளியான யுவராஜிக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இறுதிமூச்சு உள்ள வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ரா - வெங்கடாசலம் தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஒரு கும்பலால் கொடூரமாக கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கும்பல், ரயில் தண்டவாளத்தில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுவிட்டது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால், அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்த
கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்! மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!!

சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. யுவராஜின் தம்பி தங்கதுரை உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ., படித்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று காலையில் வீட்டில் இருந்து கல்லூரி பேருந்தில் ஏறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை.   இரவில் பல இடங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்துள்ளனர். கோகுல்ராஜை பற்றிய தகவல் இல்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தாயாருக்கு சந்தேகம் வலுத்தது.   மறுநாள் காலையில் கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக்கிடம் விசாரித்தபோது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இளம்பெண்கள் வாக்கு யாருக்கு?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதிதாக வாக்களித்த இளம்பெண்கள், நடப்பு அரசியல் நிகழ்வுகளை முன்வைத்து வாக்களித்து இருப்பதும், அவர்களிடையேயும் அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை (பிப். 19) நடந்தது. மாநகர பகுதிகளைக் காட்டிலும், கிராமங்களை உள்ளடக்கிய பேரூராட்சி, நகராட்சிகளில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.   இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கணசாலை, தாரமங்கலம் நகராட்சிகளிலும், மாநகராட்சி பகுதியிலும் முதல்முறை வாக்களித்த இளம் பெண் வாக்காளர்கள் சிலரிடம், எந்தெந்த அம்சங்களை முன்னிறுத்தி வாக்களித்தீர்கள் என கேட்டறிந்தோம். அவர்களிடம் இருந்து எதிர்பாராத சில பதில்களும் கிடைத்தன. தாரமங்கலம் நகராட்சியில் வசிக்கும் கல்லூரி மாணவி உஷா (19), அவருடைய அக்காவும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன.   சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.   இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   மாநகர
வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு
கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை; தீர்ப்பு மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

குற்றம், சேலம், நாமக்கல், மதுரை, முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பு, வரும் மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், நாமக்கல்லைச் சேர்ந்த, தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார்.   கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.   மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.   கோகுல்ராஜ், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நெ
வெல்லம் உருகி ஊத்துது… மிளகு சப்ளை இல்ல… தொடரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு குளறுபடி!

வெல்லம் உருகி ஊத்துது… மிளகு சப்ளை இல்ல… தொடரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு குளறுபடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உருகி ஓடும் வெல்லம், தரமற்ற மளிகைப் பொருள்கள், தருவதாகச் சொல்லப்பட்ட துணிப்பை இல்லாதது என ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அரிசி பெறக்கூடிய 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன. 4ம் தேதி தொடங்கியது. 1200 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   பச்சை அரிசி (ஒரு கிலோ), வெல்லம் (ஒரு கிலோ), முந்திரி (50 கிராம்), உலர் திராட்சை (50 கிராம்), ஏலக்காய் (10 கிராம்), பாசிப்பருப்பு (500 கிராம்), ஆவின் நெய் (100 கிராம்), மஞ்சள்தூள் (100 கிராம்), மிளகாய்த்தூள் (100 கிராம்), மல்லித்தூள் (100 கிராம்), கடுகு (100 கிராம்), சீரகம் (100 கிராம்), மிளகு (50 கிராம்), புளி (200 கிராம்), கடலைப்பருப்பு (250 கிராம்), உளுந்தம் பருப்பு (500 கிரா
மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

மசாஜ் அழகி கொலை: சஸ்பெண்ட் போலீசாரில் இருவருக்கு ‘வெண்ணெய்’; இருவர் கண்ணில் ‘சுண்ணாம்பு’! கமிஷனரின் பாரபட்சம் ஏன்?

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், படுகொலை செய்யப்பட்ட மசாஜ் அழகியுடனும், அவருடைய ரகசிய காதலனுடனும் தொடர்பில் இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு போலீசாரில் இருவரை மட்டும் பணிக்கு திரும்ப அழைத்துள்ள மாநகர காவல்துறை, எஸ்ஐ உள்ளிட்ட இருவருக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.   சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஓர் அபார்மெண்ட்டில் தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பு, அதிமுக பிரமுகரும், சேலம் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான நடேசனுக்குச் சொந்தமானது. தேஜ் மண்டல், சேலத்தில் சங்கர் நகர், அங்கம்மாள் காலனி ஆகிய இடங்களில் 'தேஜாஸ் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் மையங்களை நடத்தி வந்தார். தான் வசித்து வந்த வீட்டிற்குக் கீழ் தளத்தில் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தன்னிடம் வேலை செய்து வந்த ரிஷி, நிஷி,