சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’
சேலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு போலி ரசீது மூலம் கையாடல் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என நான்கு மண்டலங்களும், 60 கோட்டங்களும் உள்ளன. இம்மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில், சூரமங்கலம் மண்டல கணக்கு வழக்கு விவரங்களை தணிக்கை செய்ததில், பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதும், மாநகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விவரங்கள்:
தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதி
சேலம் மாநகராட்சி மையஅலுவலகத்தில் இருந்துசொத்துவரி, தொழில் வரி,பிறப்பு - இறப்பு படிவம்,சொத்து...