இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!
இந்திய இறையாண்மைக்கு
எதிராக பேட்டி அளித்ததாக
உடுமலை கவுசல்யாவை
பணியிடைநீக்கம் செய்து
வெலிங்டன் கண்டோன்மென்ட்
உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா. தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர், கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனர்.
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கவுசல்யா சமூகநீதி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். முற்போக்கு அமைப்புகள் பெயரில் இயங்கி வரும் சில அமைப்புகள் அவரை புதிய போராளியாக முன்னிறுத்தின.
சங்கர் படுகொலைக்குப் பிறகு, அ