ஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் இன்று (பிப்ரவரி 28, 2018) தகனம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி (55). 4 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.
அதன் பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அவர் தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றி