முட்டாள் முதல்வனும் முட்டுக் கொடுக்கும் ரசிக குஞ்சுகளும்!
திருச்சியில் நடிகர் விஜய் பேசிய பேச்சு, முதலமைச்சர் ஆன பிறகும் சினிமா நடிகர் மனநிலையில் இருந்து பேசியதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.
தவெக தலைவர் நடிகர் ஜோசப் விஜய், மே 10ம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் / கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஒருவழியாக தட்டுத்தடுமாறி, பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து அக்கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.
நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் ஜோசப் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவி...









