தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!
காலம் காலமாக சனாதன சடங்குகளின் பெயராலும், மூடநம்பிக்கைகளாலும் விலங்கிடப்பட்டு, இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண் குலத்தில் இருந்து தீக்குழம்பாய் பீறிட்டு வந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.
ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த எல்லா அவைகளிலும் நுழைந்து தன்னை நிரூபித்து, மற்ற பெண்களுக்கும் இன்றளவும் நிரந்தர முன்மாதிரியாக நிலைத்துவிட்டவர், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. காலத்தை விஞ்சிய அவருடைய சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று, தேவதாசி முறை ஒழிப்பைச் சொல்லலாம். இன்று அவருடைய 133வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டு கவுரப்படுத்தி இருக்கிறது.
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, அவருடைய பிறந்த நாளை, 'மருத்துவமனை தினமாக' கொண்டாடப்படும்