திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர்.
''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.
''அறிவுக்கோயில் தலைவரு
போன பிப்ரவரி மாசம் சேலத்துல
அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன்
ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,''
''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு.
கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு,
கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே...
தலைவரு பேரளவுக்கு சும்மா
உட்கார்ந்துட்டுப் போனாரே...
அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க...
நல்லா ஞாபகம் இருக்கு...,''
''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''
''அன்னிக்கு சாயங்காலம்
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு
முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு,
அவரோட அப்பா நினைவாக
செல்பி எடுத்துக்கிட்டாரு.
புரோக்கர் ஊடகங்கள் எல