Monday, July 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இலக்கியம்

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

கருங்கால் கொக்கும்… முலை குளமும்!

இலக்கியம், முக்கிய செய்திகள்
  சங்க இலக்கியங்களில் பெண்களின் அங்கங்கள் குறித்தான வர்ணனைகள் உச்சம் தொட்டாலும், அவை ரசிக்கத்தக்க வகையிலேயே இருந்திருக்கின்றன. முகச்சுளிப்பை ஏற்படுத்துவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், குறுந்தொகையில் உவமைகள் வெகு இயல்பாக பொருந்தி வந்திருக்கும். எல்லா காலத்திலும் ரசிக்கத்தக்க வகையில் பாடல்கள் அமைந்திருப்பதும் குறுந்தொகையின் தனித்த அடையாளம்.   எட்டுத்தொகையுள் செறிவும், இனிமையும் மிக்கது, குறுந்தொகை என்று எந்த அவையிலும் நாம் துணிச்சலாக கட்டுத்தொகை கூட வைக்க முடியும்.   தமிழ் ஆர்வலர்களிடம் உரையாடுகையில் அடிக்கடி இப்படிச் சொல்வேன்... ''குறுந்தொகையில் பாடல்களை எழுதிய புலவர்கள், பாடு பொருள்களுக்காக மெனக்கெட்டிருப்பார்களே தவிர, பொருள் (பரிசில்) தேடி அலைந்திருக்க மாட்டார்கள். ஆனால், இப்போதுள்ள பேச்சாளர்கள் சிலர
தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

இலக்கியம், புத்தகம், முக்கிய செய்திகள்
பூ-வ-ன-ம்   'தொல்காப்பியப் பெயர்த்தி' என்ற பெயரில் விரைவில் கவிதை நூல் வெளியிட இருப்பதாக இந்நூலாசிரியர் மழயிசை ஒருநாள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அப்போதுமுதல், அவரைவிடவும் இந்த நூலுக்காக பேரார்வத்துடன் காத்திருந்தேன். எனக்குத் தொல்காப்பியம் பிடிக்கும் என்பது மாத்திரமல்ல; வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. ஒன்று, தொல்காப்பியரின் பெயர்த்தி என்று சொல்லிக்கொள்ளும் அசாத்திய துணிச்சலும் ஒருவருக்கு இருக்கிறதா? என்ற வியப்பு; அடுத்து, மழயிசை என்ற நூலாசிரியரின் புனைப்பெயர். இரண்டு தனித்துவ அடையாளங்களும் எதிர்பார்ப்பை உண்டாக்கின. நூலின் தலைப்பிற்கேற்றவாறு தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நவீனத்தையும் இணைத்து நிகழ்கால சமூக அவலங்களை சாடியிருக்கிறார் மழயிசை. எல்லா புதுமுக படைப்பாளிகளும் பேசுகிற பாடுபொருள்களைத்தான் இந்நூலாசிரியரும் பேசுகிறார் என்
பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி
பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   தமிழ்ச்சிற்றிதழ்கள் உலகில் தனக்கென்று தனித்த இடத்தை தக்க வைத்திருக்கும் கவிஞர் பெ.அறிவுடைநம்பியின் நான்காவது படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, 'காற்றில் மிதக்கும் வானம்'. கவிதை நூல். 'விழியில் ததும்பும் நீர்', 'நீரில் ஆடும் நிலா', 'மழையில் நனைந்த மின்னல்' ஆகியவை இவருடைய முந்தைய படைப்புகள்.   கவிதை நூலுக்கு இவர் இடும் தலைப்பே ரசனையானது. ஆனால், காற்றில் வானம் மிதக்குமா? என்பது கவிஞனுக்கேயுரிய முரண். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்காரர். எனினும் அவர், கற்பனை வளத்திற்கும், கவி புனையவும் ஒருபோதும் பூட்டிட்டுக் கொண்டதில்லை. அதனால்தான், கூட்டுறவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கவி உலகில் தும்பியாய் பறந்து கொண்டிருக்கிறார்.   படைப்பு நோக்கில் சொல்ல வேண்டுமானால் கவி-ஞர் பெ.அறிவுடைநம்பியிடம் எப்போதுமே ஓர் எள்ளல்தனம் இருக்கும். குறுங்கவிதைகளை 'நற
திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்பது முதுமொழி. அதுபோல், 'ஆடம்பரம், அழிவையே தரும்' என்பது சான்றோர் அனுபவ மொழி.     வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் 'பாமா விஜயம்' படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.     ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் ம
பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

இலக்கியம், புத்தகம்
ஸ்ரீலங்காவில் இலக்கிய படைப்பாளிகள் அதிகளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதிலும், இஸ்லாமிய சமூகத்தில் நிறைய பேர் எழுத்தாற்றலுடன் இருப்பதையும் அறிவேன். அவர்களுள் புதிய வரவாக, கவிதை உலகில் நாலு கால் பாய்ச்சலில் களம் இறங்கி இருக்கிறார், நுஸ்கி இக்பால். காத்தான்குடியைச் சேர்ந்தவர். அவருடைய முதல் படைப்பு, 'விடியல் உனக்காக...' கவிதை நூல். இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். கட்டடப் பொறியாளரான நுஸ்கி இக்பால், அடுக்கு மாடி கட்டடத்தின் உப்பரிகையில் நின்று உலகத்தைப் பார்க்காமல், சாமானிய மக்களோடு சாமானியராக பயணப்பட்டே, கவிதைகளை வடித்திருக்கிறார் என்பதை இந்நூலில் உள்ள பல கவிதைகள் உணர்த்துகின்றன. கல்லூரிக்கால நண்பன், பேருந்துப்பயண அனுபவம், நடைபாதைவாசிகளின் துயரம், அகதிகளின் ஓலம், ஒருதலைக்காதல், மதுப்பழக்கத்தின் கொடூரம், உழைக்கும் வர்க்கம் என பாடுபொருள்களாகக் கொண்ட கரு ஒவ்வொன
நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…

நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
திரை இசையில் வள்ளுவம்: (தொடர் - 8/17) நோயாய்  நெஞ்சினில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்... கடந்த இரண்டு தொடர்களிலும் 'ஊக்கம் உடமை', 'மெய்ப்பொருள் அறிதல்' என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம். 'என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் நலமறிய ஆவல் என்ற பகுதி இருக்கிறதே' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு. சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். 'மகாதேவி' (1957)படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித்ததோ அந்தப் பாம்பே வந்து கடிப்பட்
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… -தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… -தில்லைக்கரசி நடராஜன்

இலக்கியம், மகளிர்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம். அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்...அவளுக்கு என்ன கஷ்டமோ" என்