Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட...
ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
  குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர திமுக செயலாளராகவும், நகர மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண்ணன். இவர் மீது திமுக மேலிடத்திற்கு அண்மையில் ஒரு பரபரப்பு புகார் கடிதத்தை கழக உடன்பிறப்புகள், பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட...
பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.  கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய். அந்த மாநாட்டில், ''தந்தை பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம். அந்த சுயநலக் கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,'' என திமுகவின் பெயரைச் சொல்லாமலேயே சம்மட்டி அடி கொடுத்தார் விஜய். அதேபோல, ''சாதி, மதத்தின் பெயராலே பெரும்பான்மை, சிறுபான்மை பயத்தைக் காட்டும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி,'' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் மண்டையிலும் 'பொளேர்' என ஒரு போடு போட்டார...
விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
''தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியபோதே அவரின் அரசியல் வருகை தொடர்பான பேச்சும் தொடங்கி விட்டது. இன்றைய தேதியில், இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வெகுசில நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் முழுநேர அரசியல்வாதியாக களம் காண வருகிறார் என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன. கட்சி தொடங்கியபோதே, நமது இலக்கு 2026 சட்டப...
எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி, இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே? பழைய மாணவர்கள் பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கடிந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவரை குளிர்விக்கவே இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது எதைக் காட்டுகிறது?  நடிகர் விஜயை அரசியல் ரீதியாக அவரை வழிநடத்த சரியான ஆள் இல்லை என்ற விமர்சனம் கிளம்பிய நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் களத்திலும் தான் ஒரு கில்லிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் தளபதி. ஏற்கனவே சமூக ஊடகங்களில் விஜயை, திமுகவின் இணையக்கூலிகள் ஆபாசமாக அடித்து துவைத்து வரும் நிலையில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது ஆளும்தரப்...
அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியில் ஐஏஎஸ் அதிகாரி, பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கூட்டாக நடத்திய பணி நியமன ஊழல் விவகாரத்தில் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைகளும் உருளப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் (கிரேடு - 2) எனப்படும் இரண்டாம் நிலை செயல்திறன் உதவியாளர் காலியிடங்கள் கடந்த 2022ம் ஆண்டு நிரப்பப்பட்டது. இந்தப் பிரிவில் மொத்தம் 6 காலியிடங்கள் இருந்தன. இதற்காக, 9.12.2022ம் தேதி நேர்காணல் நடந்தது. மொத்தம் 55 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். குறைந்தபட்சக் கல்வித்தகுதி ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கான ஊதிய விகிதம் 19500 - 62500 ரூபாய். குறைந்தபட்ச கல்வித்தகுதி, நல்ல சம்பளம், உள்ளூரிலேயே வேலை என்பதால், 6 செயல்திறன் உதவியாளர் பணியிடங்களையும் சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், ஆளும்...
‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

‘எவ்வளவோ செஞ்சிருக்கேன்… ஆனா அந்த மாஜி எம்.பி., கண்டுக்கவே இல்ல…!’ – துணைவேந்தர் புலம்பல்!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு எப்போது பெரியார் என்ற கலகக்காரரின் பெயரைச் சூட்டினார்களோ அப்போது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. வாழ்நாளெல்லாம் சாதி ஒழிப்பிற்காகப் போராடி வந்த பெரியாரின் பெயரில் அமைந்த பல்கலையில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. திமுக, அதிமுக எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் சாதியவாதம் மேலோங்கி இருக்கிறது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன், குழந்தைவேல், ஜெகநாதன் ஆகியோர் அடுத்தடுத்து துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் குழந்தைவேல், ஜெகநாதன் ஆகிய இருவரும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தோடு துணைவேந்தர் ஆனவர்கள் என்ற பேச்சும் உண்டு. இப்போதைய துணைவேந்தர் ஜெகநாதன், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பெரியார் பல்கலையில் பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த ஜூன் ...
கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஜூன் 18ம் தேதி திடீரென்று கொத்துக் கொத்தாக பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் கண் பார்வை மங்கி விட்டதாக கதறினர்; சிலருக்கு ரத்த வாந்தி நின்றபாடில்லை. அப்போதுதான் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் பலரும் பட்டியலினத்தவர்கள்; கூலித்தொழிலாளிகள். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்பியும் மருத்துவமனைக்கு விரைந்து, என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினர். அதற்குள், சிகிச்சைக்கு வந்தவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். ஜூன் 19ம் தேதியும்...
மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

அரசியல், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் பதினெட்டாவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. முதல்கட்டமாக தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. 26 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு சுற்றிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுத...