சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.
மத்திய அரசின் கதர் மற்றும்
கிராமத் தொழில்கள் ஆணையத்தின்
(கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில்
மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள்
இயங்கி வருகின்றன.
இந்த துறை, மத்திய அமைச்சர்
நிதின் கட்கரியின்
கட்டுப்பாட்டில் உள்ளது.
கையால் நூற்ற நூலை,
கையாலும் காலாலும் நெய்யப்படும்
துணிதான் கதர். அப்படியான
கதர் துணி நெசவாளர்கள்
மற்றும் கிராம கைவினைஞர்களால்
உற்பத்தி செய்யப்படும் பொருள்களை
சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள்
தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள
சங்கங்களில் நாலைந்து தவிர
ஏனைய சர்வோதய சங்கங்கள்
கதர் து