Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

விஞ்ஞானம்

பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
உலகெங்கும் மாட்டு சாணம் பல்வேறு வகையில் பயன் தருகிறது. இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணியை வைத்து உருவாக்கப்படும் வரட்டி, சமையல் செய்ய எரிபொருளாகப் பயன்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளோம்.   மண் தரை, மண் சுவர் போன்றவற்றின் மீது மாட்டு சாணம் பூசும்போது பிணைப்பு பொருளாக மாறி மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணையப் பயன்படுகிறது. காலம் காலமாக, உலகெங்கும், விவசாயிகள் மாட்டு சாணம் உட்பட கால்நடை கழிவுகளை எரு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாட்டு சாணம் அதுவும் குறிப்பாக நாட்டு பசுவின் சாணம் கதிரியக்கத்தை 60 சதம் தடுத்து விடுகிறது என ஆய்வு கூறுவதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. அதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன? அந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து அறிவியலார்கள் எழு...
அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
தொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன. இயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட ம...
பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகம், கல்வி, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
குவாண்டம் இயக்கவியல் துறையில் அளப்பரிய சாதனை படைத்த இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன்-ன் 135வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கூகுள் நிறுவனம் இன்று (டிசம்பர் 11, 2017) டூடுல் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள பிரெஸ்லூ நகரில், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் மேக்ஸ் பார்ன். இப்போது, இந்த பிரெஸ்லூ நகரம் போலந்து நாட்டில் உள்ளது. பிரெஸ்லூவில் உள்ள கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி ஆய்வை நிறைவு செய்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆர்வமிக்க மேக்ஸ் பார்ன் இல்லாவிட்டால், இன்றைக்கு மருத்துவத்துறையில் நமக்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சாதனங்கள் கிடைத்திருக்காது. அல்லது, இன்னும் வெகுகாலம் ஆகியிருக்கலாம். கருத்தியல் இயற்பியல், குவாண்டம் இயக்கவியலில் மட்டுமின்றி, கணித சமன்பாடுகளை உருவாக்குவதிலும் கெட்டிக்காரர். தனிநபர் கணினி பயன்பாட்டிற்கும் இவருடைய பல ...
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந...