Saturday, July 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வெற்றி பிறந்த கதை

”உறவுகளை இணைக்கும் பாலமாய் இருப்பதே மகிழ்ச்சி” – ஈசன் கார்த்திக் பெருமிதம்

”உறவுகளை இணைக்கும் பாலமாய் இருப்பதே மகிழ்ச்சி” – ஈசன் கார்த்திக் பெருமிதம்

வர்த்தகம், வெற்றி பிறந்த கதை
''கல்யாணமோ காதுகுத்தோ எந்த ஒரு வீட்டு விசேஷம் என்றாலும் மாமன்,மச்சான், அண்ணன்,தம்பி என்று ஒட்டுமொத்த சொந்தபந்தங்களும் களத்தில் இறங்கி, வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு பம்பரமாய் சுழன்றது எல்லாம் அந்தக்காலம். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைத்து, வீட்டு விசேஷங்களை சிறப்பாக நடத்திக் கொடுப்பதே என்னைப்போன்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள்தான்,'' என தன் தொழில் மீதான பெருமிதத்தை மிடுக்கோடு கூறுகிறார் ஈசன் கார்த்திக். சேலம் பெரமனூர் மெயின் ரோடு, கேப்பிடல் டவர்ஸில் 'யுனிக் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஈசன் கார்த்திக். ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய வரவு. ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறை தேவை குறித்து விரிவாக பேசலானார்... சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் ஜீனிலேயே கலந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள், வெற்றி பிறந்த கதை
-வெற்றி பிறந்த கதை-   சேலத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர்... சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என வெகு சிலரையே சொல்ல முடியும். அந்தப்பட்டியலில் டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க முடியாத ஆளுமை.   மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.   தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது 'விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, 'வெற்றி பிறந்த கதை' பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில்