Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

விவசாயம்

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால், சேலம் மாவட்டத்தில் பரவலாக நெல் நாற்று நடவும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   பூகோள ரீதியாகவே, தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், பருவ மழைக்காலங்களில் கூட சராசரியைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருக்கிறது. புயல், வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் மழை கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலைதான் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக்காலமும், அதன்பிறகான வடகிழக்குப் பருவமழைக்காலமும் விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதுடன், விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழர் த...
நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலை என்றதுமே, நிலத்தை பறிகொடுத்து நேரடியாக பாதிக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசும் நாம், அதிகம் கவனப்படுத்தப்படாத மற்றொரு பெருங்கூட்டமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்தே போனோம்.   காலங்காலமாக நில உடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகமே இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். 2009களில் உலகமே பொருளாதார மந்தநிலையால் சுருண்டு கிடந்தபோது, இந்திய பொருளாதாரம் கம்பீரமாக நின்றது. அதற்கு சாமானியனின் சேமிப்பும், கிராமப் பொருளாதாரமும் முக்கிய காரணிகளாக இருந்தன.   அத்தகைய வலிமையான கிராமப் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு, வழிகாட்டி மதிப்பில் இருந்து இரண்டரை...
”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

”விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடத்தும் போர்!”; முன்னாள் எம்எல்ஏ விளாசல்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் மீது எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறது என்று முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.   விவசாயத்தை நாசமாக்கும் எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்து திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.பார்த்திபன் 'புதிய அகராதி' இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டி:   சேலம் - சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை எனப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக ஐந்தாவது நாளாக இன்று (ஜூன் 22, 2018) மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிழக அரசு, எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக காவல்துறையினர் மூலம் விவசாயிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களின் நிலங்களை கையகப்படுத்துகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்ட...
தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்;  3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்; 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
வரும் 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு, ரூ.8000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.   திமுக வெளிநடப்பு:   2018&2019ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15, 2018) தாக்கல் செய்தார். காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக சந்தித்துப் பேச தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததைக் கண்டித்தும் திமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சீருடையில் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதுமே, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையி...
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட...