Wednesday, December 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சினிமா

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

சினிமா, முக்கிய செய்திகள்
விக்ரம் - விமர்சனம் நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர். இசை: அனிருத் ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன் ஆக்ஷன்: அன்பறிவ் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கம்: லோகேஷ் கனகராஜ்   கதை என்ன?:   காவல்துறை அதிகாரியான தன் மகனை டிரக் மாபியா கும்பல் கொலை செய்து விடுகிறது. மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன், அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா? போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா? என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.   திரைமொழி:   படத்தின் துவக்கத்திலேயே, பத்தல... பத்தல... பாடலில் அதகளம் செய்கிறார் கமல். அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விடுகிறது. அவருடன் காளிதாஸ், ஹ
ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

சினிமா, முக்கிய செய்திகள்
19.3.1940 - 12.10.2021   பழம்பெரும் நடிகரும், ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கதாநாயகனாகவும் நடித்த ஸ்ரீகாந்த் (81), செவ்வாய்க்கிழமை (அக். 12) சென்னையில் காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். பிரபல இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை (1965) படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு கதாநாயகனாக நடித்திருந்தார், ஸ்ரீகாந்த்.   அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கிய பாமா விஜயம், பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, எதிர் நீச்சல் படத்தில் கிட்டு என்ற பாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.   தமிழில்
ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு சற்று அதிகம் உண்டு. தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்
முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

முக சிகிச்சையால் வந்த வினை! எப்படி இருந்த ரைஸா… இப்போது இப்படி ஆனார்!!

சினிமா, முக்கிய செய்திகள்
  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைஸா வில்சன். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு தமிழத்திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வேலை இல்லா பட்டதாரி-2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.   தற்போது எப்ஐஆர், தி சேஸ், ஹேஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரைஸா வில்சன், அடிப்படையில் ஒரு மாடல் அழகியும் ஆவார். அதனால் எப்போதும் தன்னை பொதுவெளியில் வசீகரமாக காட்டிக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு வருவார். அண்மையில், ஃபேஷியல் செய்து கொள்வதற்காக சென்னையில் உள்ள பிரபலமான அழகுநிலையத்திற்குச் சென்றிருந்தார். பேஷியல் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அவருடைய முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் முக
நீ தெய்வம் தந்த அதிசயம்…!

நீ தெய்வம் தந்த அதிசயம்…!

சினிமா, முக்கிய செய்திகள்
(பனை ஓலை)   சில பாடல்கள், சில நிகழ்வுகள் நம்மையும் அத்துடன் ஒன்றச் செய்துவிடும். இளையராஜா, கண்ணதாசன், ஜென்சி ஆகியோரின் கூட்டணி அவர்களின் படைப்புகளுடன் நம்மை அடிக்கடி ஒன்றிப் போகச் செய்யும் மாயாஜாலங்களை அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன. அந்தக் கூட்டணி எப்போதும் வெற்றிக் கூட்டணியாக மட்டுமே அமைந்திருக்கின்றன. அவர்களின் ராஜாங்கத்தை யாரும் சதி செய்து கவிழ்த்து விட முடியாது. எப்போதும் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...' என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.   பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பழமையில் ஊறிப்போயிருக்கும் சமூகதளத்தில் புதிய கலாச்சார மாற்றத்திற்கான வாயில் கதவுகளை திறந்து வைத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்ற பெருமை, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்கு உண்டு. 1979, மே 18ல் வெளியானது. தேவராஜ் - மோகன் என்ற இரட்டை இயக்குநர்களின் அற்புத படைப்பு. ஏற்கனவே, அன்னக்கிளியில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்தான். எனினும், இவர்களிடம் இருந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி என உலகப்படங்களின் தரத்தில், இன்றளவும் 'கல்ட்' (Cult) வகைமையிலான படம் வரும் என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாத காலக்கட்டம் அது. இந்தியா, சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழும் பீரியட் படம்தான் இந்த ரோ.ர. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ரோ.ர. பற்றி ஒரு மீளாய்வாகவே எழுதுகிறேன். சேலம் மாவட்டத்தின் வண்டிச்சோலை எனும் சிறிய மலைக்கிராமம்தான் ரோ.ர.வின் கதைக்களம். மண்ணின் மைந்தனாக இரு
காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

சினிமா, முக்கிய செய்திகள்
கடந்த 2010ம் ஆண்டில் சிபிராஜ், பிரசன்னா நடிப்பில் 'நாணயம்' படம் வெளியானது. அதில், 'நான் போகிறேன் மேலே மேலே... பூலோகமே காலின் கீழே...' என்ற டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அந்தப்பாடலின் பல்லவியை இன்று (செப். 25, 2020) மெய்யாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார், ரசிகர்களால் 'பாடும் நிலா பாலு' என்றழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74). ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 4.6.1946ல் பிறந்த எஸ்.பி.பி.யின் முழு பெயர், ஸ்ரீபதி பண்டிதராத்யூலா பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையிசை பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த எஸ்.பி.பி., கடந்த ஆகஸ்ட
ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

சினிமா, முக்கிய செய்திகள்
'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த ராஜூ முருகன் இயக்கத்தில், மார்ச் 6ம் தேதி வெளியாகி இருக்கிறது, 'ஜிப்ஸி'. தாய், தந்தையை இழந்த, நாடு முழுவதும் சுற்றி வரும் ஒரு நாடோடிக்கும், இஸ்லாமிய பழமைவாதங்களில் ஊறிப்போயிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமான காதலையும், எதிர்பாராத மதக்கலவரத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட விளைவுகளையும் பேசுகிறது, ஜிப்ஸி. சபாஷ் ராஜூ முருகன்!   கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் ஏதுமற்ற ஒரு சாமானியனின் பீதியடைந்த முகமும், அருகே கொலைவெறியுடன் கையில் வாளேந்தி நிற்கும் ஓர் இந்து பயங்கரவாதியின் படமும் அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற காட்சியை, சமகால பிரச்னைகளுடன் கோத்து, கதை சொன்ன விதத்தில் ராஜூமுருகனின் சமூகப்
திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள
கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா

கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னைக்கு வந்த இந்த பத்து வருடங்களில் சென்னை என்றால் மாம்பலம், அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கேகே நகர், அசோக் நகர் ஆகிய நகரங்களைத்தான் நினைத்திருந்தேன். மீடியாக்கள் எனக்குள் அப்படித்தான் உருவாக்கி வைத்திருந்தன.   உண்மையான சென்னை என்றால் அதாவது பலகாலமாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை எதுவென்றால், இன்று வட சென்னை என குறிப்பிடப்படும் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, மூலக்கொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம், எழும்பூர் பகுதிகள்தான். ஒரு படத்தின் கள ஆய்வுக்காக முதன்முறையாக வட சென்னை செல்ல நேர்ந்த போதுதான் அதிர்ந்து போனேன். சென்னையின் அசலான முகங்களையும் இருண்ட தெருக்களையும் அப்போதுதான் பார்க்கிறேன்.   மூன்று சக்கர பளுதூக்கும் வண்டியிலேயே குடும்பம் நடத்தும் மகிழ்ச்சியான குடும்பங்களையும், மீனவர் வசிக்கும் சகதி ந