Thursday, September 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.   சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர
சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக அடுத்தடுத்து மேலும் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற தகவலால் ஒரு கிராமமே திகிலடைந்து கிடக்கிறது.   சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது. மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து
மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை இன்று (செப். 7) மதியம் 1.09 மணியளவில் முழு கொள்ளளவை எட்டியது. 43வது முறையாக அணை முழுவதும் நிரம்பியுள்ளது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த அணை நிரம்பினால், காவிரி படுகையையொட்டி உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனினும் இந்த அணையின் நீர் இருப்பு என்பது, கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர் கொள்ளளவைப் பொருத்தும், அந்த மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக அணையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில
சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!

சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தனபால் உள்பட தமிழகம் முழுவதும் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது இன்று (2019 ஆகஸ்ட் 22) மாலை வழங்கப்படுகிறது.   மருத்துவத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு சேவை, தனித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் இந்த விருது மற்றும் வெகுமதியை வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அ
பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த
விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி
இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு இந்த முறை சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்பதை கூர்ந்தாய்வு செய்தால், கேள்விகளே மிஞ்சும். எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்... ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்... ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.   ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோ
சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக வந்த தகவலால், அதிர்ச்சி அடைந்த பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், தங்கள் கட்சிகளுக்கும் நூலக வளாகத்தில் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்குமாறு திடீர் கோதாவில் குதித்துள்ளனர்.   சேலம் குமாரசாமிப்பட்டியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில், மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் பின்பகுதியில் 5000 சதுர அடிக்கு மேல் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, பழைய பேலஸ் தியேட்டர் எதிரில் செயல
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

சேலம், முக்கிய செய்திகள்
காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஆகஸ்ட் 13, 2019) தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கேஆர்எஸ், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளும் நிரம்பின. தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கர்நாடகாவின் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சத்து 39200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அபரிமிதமான நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு (ஆக. 12) 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்தது. கடந்த 9ம் தேதி மேட்டூர