மகாநதி! நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே எப்படி?
மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் நடுத்தர வயது இளைஞன் ஒருவன், பட்டணத்தைச் சேர்ந்த மோசடிப் பேர்வழியை நம்பி தன் சொத்துக்களை எல்லாம் இழக்கிறான். பிள்ளைகளும் தொலைந்து போகிறார்கள். சிதிலம் அடைந்த தன் வாழ்க்கையை அவன் மீட்டெடுத்தானா? குழந்தைகளைக் கண்டுபிடித்தானா? என்பதுதான் மகாநதி படத்தின் மையக்கதை.
கொரியன், ஈரானிய படங்கள்தான்உலகப்படங்கள் என அலட்டிக்கொள்வோர், சந்தேகமே இல்லாமல்மகாநதியைக் கொண்டாடலாம்.இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்உலகப்படங்களின் வரிசையில்கமல்ஹாசனின், மகாநதிநின்று விளையாடும்.
கமலின் உற்ற நண்பர்களுள்ஒருவரான சந்தானபாரதி இயக்கத்தில்1994, ஜனவரி 14ஆம் தேதி பொங்கல்விருந்தாக வெளியானது.இன்றுடன் (14.1.2025)மகாநதிக்கு 31 வயது.
மோசடி குற்றத்திற்காகதண்டனை பெற்று, சென்னைமத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கிருஷ்ணா என்கிற கிருஷ்ணசாமி (கமல்).அதே ...