Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாடு

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம
இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்ட
சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

ஈரோடு, சேலம், தமிழ்நாடு
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், மே 25ம் தேதி, புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். 78 வயதான மாதையன், நீண்ட காலமாக சிறைக் கொட்டடியில் இருந்தே உயிர் விட்டிருக்கிறார். அவருடைய மரணம், தமிழக சிறைச்சாலைகள் வயதான கைதிகளின் வதை முகாம்களாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். 1987ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரம்பத்தில், சிதம்பரம் கொலை வழக்கில் மாதையன் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 1996ம் ஆண்டு அவருக்கு
எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு வினாத்தாள் ஓரளவு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித்தேர்வை சனிக்கிழமை (மே 21) நடத்தியது. மாநிலம் முழுவதும், 4012 மையங்களில் நடந்த இத்தேர்வை, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். சேலம் மாவட்டத்தில், மொத்தம் 161 மையங்களில், 63437 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாலபாரதி தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். முறைகேடுகளை தடுக்க, மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு ஆண்டாக
உதயநிதி பட ஷூட்டிங்கால் முடங்கிய சேலம் குகை; 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல்!

உதயநிதி பட ஷூட்டிங்கால் முடங்கிய சேலம் குகை; 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதில் சிக்கல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் பட ஷூட்டிங்கால் சேலம் திருச்சி மெயின ரோட்டில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது. நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது "மாமன்னன்" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். வடிவேலு, பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ், இந்தப் படத்தை இயக்குகிறார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கிறார்.   ''மாமன்னன்'' படத்துக்காக கடந்த இரு மாதத்திற்கும் மேலாக சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் செட் அமைத்து முக்கிய காட்சிகளை படம் பிடித்து வருகின்றனர். கடந்த ம
பெரியார் பல்கலை ஆசிரியர் பிணையில் விடுதலை; பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

பெரியார் பல்கலை ஆசிரியர் பிணையில் விடுதலை; பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பல்கலைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்பதால் பாலியல் புகாரில் சிக்க வைக்கப்பட்ட உதவி பேராசிரியரை பிணையில் விடுதலை செய்து சேலம் நீதிமன்றம் இன்று (மே 5) உத்தரவிட்டுள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரேம்குமார் (32). இவர் மீது எம்.ஏ., இறுதியாண்டு படித்து வரும், புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர், பாலியல் புகார் அளித்தார்.   இது குறித்து, சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் பிரேம்குமார் மீது பாலியல் சீண்டல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமை, சாதி வன்கொடுமை ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.   இதையடுத்து அவர், முன்பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் சரணடைய
களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

களை கட்டிய குந்தாரப்பள்ளி சந்தை; ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளுள் ஒன்றான குந்தாரப்பள்ளி சந்தையில், கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன. ரம்ஜான் பண்டிகை எதிரொலியாக அதிரிபுதிரியான விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறி, மசாலா பொருள்கள் விற்றாலும் இறைச்சிக்கான ஆடு விற்பனைக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 29) அன்றும் வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது.   முஸ்லிம்களின் முக்கிய விழாக்களுள் ஒன்றான ரம்ஜான் பண்டிகை, வரும் 3ம் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை குறி வைத்து, கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, ஓசூர், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், வ
கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

சேலம், தகவல், முக்கிய செய்திகள்
கோவிட் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தம் 1392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அவர் பேசியது:   கோவிட் தடுப்புப் பணிக
ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

ஆத்தூர் ‘அம்மன்’ கொடூர கொலை; வாலிபருக்கு தூக்கு தண்டனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, பட்டியலின சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.   இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.   கொடூர கொலை:   தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி திங்க