Thursday, June 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று வழிநடத்தும் உரிமை யாருக்கும் இல்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெண்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும் என்று வழி நடத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலையில்பி.இ., இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஒரு மாணவியைகோட்டூர்புரத்தைச் சேர்ந்தஞானசேகரன் என்பவர்,கடந்த 23.12.2024ம் தேதி இரவுபல்கலை வளாகத்தில் வைத்துபாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாகஞானசேகரனை காவல்துறையினர்கைது செய்தனர். இந்நிலையில்,பாதிக்கப்பட்ட மாணவியின்புகார் குறித்த எப்ஐஆர் அறிக்கை,ஊடகங்களில் கசிந்த விவகாரம்பெரும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை...
பொறியியல் மாணவி பாலியல் வழக்கு: குற்றத்தில் அரசு ஊழியரே ஈடுபட்டாலும் மாவுக்கட்டு போடுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி!!

பொறியியல் மாணவி பாலியல் வழக்கு: குற்றத்தில் அரசு ஊழியரே ஈடுபட்டாலும் மாவுக்கட்டு போடுங்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி!!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாலியல் குற்றம், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் அரசு ஊழியராக இருந்தாலும், காவல்துறையினராக இருந்தாலும் பாகுபாடின்றி மாவுக்கட்டு போடுங்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ளஅண்ணா பல்கலைக்கழகத்தில்மாணவி ஒருவர் பொறியியல்பட்டப்படிப்பு படித்து வருகிறார்.கடந்த 23.12.2024ஆம் தேதி இரவு,அந்த மாணவி தனது காதலனுடன்பல்கலை வளாகத்தில் மறைவானஇடத்தில் நின்று பேசிக்கொண்டுஇருந்தார். அப்போது அங்கு வந்தமர்ம நபர் ஒருவர்,காதலனை மிரட்டி விரட்டியடித்துவிட்டு,தன்னை பாலியல் பலாத்காரம்செய்ததாகவும், அதை அவர்செல்போனில் வீடியோவாகபதிவு செய்ததாகவும்சம்பவத்தன்று இரவுகோட்டூர்புரம் காவல்நிலையத்தில்அந்த மாணவி புகார் அளித்தார்.அந்தப் புகாரில், தன்னிடம்அத்துமீறிய மர்ம நபர்,'இன்னொரு சார் இருக்கிறார்.அவர் அழைக்கும்போது நீசெல்ல வேண்டும்,' என்றுமிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தா...
வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

வினாடி? விநாடி? எது சரி? தமிழ் வளர்ச்சித்துறை விழித்தெழுமா?

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி ஊடகங்களிலும் 'வினாடி-வினா' போட்டிகள் நடத்தப்படுவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேட்கப்படும் வினாவுக்கு நொடிப்பொழுதில் விடை அளிக்க வேண்டும் என்பதால்தான் இத்தகைய நிகழ்ச்சிக்கு விநாடி - வினா என்று பெயர் வந்தது. இப்போது பிரச்சினை அதுவன்று. வினாடி, விநாடி ஆகியவற்றில் எந்த சொல் சரியானது என்பதுதான். வினாடி என்ற சொல்லைவி+னாடி என்றும்;விநாடி என்ற சொல்லைவி+நாடி என்றும் பிரித்து எழுதலாம். இவற்றில், 'னாடி' என்றால்எந்தப் பொருளும் தராது. 'நாடி' என்பது ஒரு வினையைக் குறிக்கும். நாடிச்செல்வது என்றும் பொருள் கொள்ளலாம். நாடித்துடிப்பையும் குறிக்கும். விநாடியில் உள்ள 'வி' என்ற முன்னொட்டானது விசை, விரைதல், சிறந்த, உயர்வான என பல பொருள்கள் தருகின்றன. விரைந்து நாடுதல் எனலாம். நொடியின் அடிப்படையில்உருவானச் சொல்தான் விநாடி.விரைந்து துடிப்பதுதான் நாடி.நாடியின் கால ...
லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழலாம்! ஆந்திரா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கை (லெஸ்பியன்) ஜோடி ஒன்றாகச் சேர்ந்து வாழ உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம்விஜயவாடாவைச் சேர்ந்தவர்மல்லிகா (25 வயது, பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவரும்காதம்பரி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரும் ஓரினச்சேர்க்கை ஆர்வலர்கள். இவர்கள் இருவரும்விஜயவாடாவில் உள்ளமல்லிகாவின் பெற்றோர்வீட்டில் கடந்த ஓராண்டாக'ஒன்றாக' சேர்ந்து வாழ்ந்தனர்.கடந்த செப்டம்பர் மாதம்காதம்பரியை அவருடையபெற்றோர் வலுக்கட்டாயமாகதங்கள் வீட்டிற்குஅழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த மல்லிகா,தனது தோழி காதம்பரியைக்காணவில்லை என்றுவிஜயவாடா காவல்நிலையில்புகார் அளித்தார். அதன்பேரில்,விசாரணையில் இறங்கிய காவல்துறை,பெற்றோர் வீட்டில் காதம்பரிஇருப்பதை அறிந்து,அவரை மீட்டனர்.ஆனால் அவரோ,தான் 18 வயது பூர்த்திஅ...
உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது. மொழி, கலாச்சார ரீதியாகமனிதனை ஓர்மைப்படுத்துகிறது.பழமையான மொழிகளுள்ஒன்றான சீனம், உலகம் முழுவதும்110 கோடிக்கும் மேற்பட்டமக்களால் பேசப்படுகிறது.ஆங்கில மொழியை 150 கோடிக்கும்மேற்பட்டோர் பேசுகின்றனர்.தொன்மையான தமிழ் மொழியை,உலகளவில் 10 கோடிபேர் பேசுகிறார்கள்.ஆக, இப்போதைக்குதமிழ் மொழி அழிந்து விடுமோஎன்ற கவலை தேவையற்றது.என்றாலும், அழியக்கூடியமொழிகளுள் தமிழ் 8ஆவதுஇடத்தில் இருப்பதாக யுனெஸ்கோசொல்கிறது கூர்ந்து நோக்கவேண்டியதாகிறது. பிற செவ்வியல் மொழிகளோடுஒப்பு நோக்கும்போது, தமிழைப் போலசெறிவான இலக்கண, இலக்கிய வளம்கொண்ட வேறு மொழிகள்உலகில் இல்லை. நம்முடையதமிழ் ச...
2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

இந்தியா, முக்கிய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள். நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...
தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் உருக்காலையில் நடந்ததொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்,மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்சிஐடியூ தொழிற்சங்கம், அதிமுக, பா.ம.க.,ஆதரவுடன் களமிறங்கிய விவகாரம்,வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,தாவப்போவதாக பரபரப்புபேச்சு கிளம்பியுள்ளது. பிரசித்தி பெற்ற சேலம் உருக்காலையில்591 நிரந்தர தொழிலாளர்களும்,1000 ஒப்பந்த தொழிலாளர்களும்பணியாற்றுகின்றனர்.ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல்வர்த்தகம் செய்து வருகிறது. இந்த உருக்காலையில் உள்ளதொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல்,கடந்த நவ. 22ம் தேதி நடந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும் இந்தத் தேர்தலில்வெற்றி பெறும் தொழிற்சங்கமே,உருக்காலை நிர்வாகத்துடனானஊதிய ஒப்பந்தம், போனஸ்,தொழிலாளர் நலன்கள் குறித்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன்,அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில்கையெழுத்திட முடியும். காலை 6 மணிக்குத் தொடங்க...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக முக்கியஸ்தர்கள்...
ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...