பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரனுக்கு ‘செக்’?
பள்ளிக்கல்வித்துறைக்கு தற்காலிக முதன்மைச் செயலர் அந்தஸ்தில் ஒருவரை தமிழக அரசு நியமித்திருப்பதன் மூலம், பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்து வரும் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-க்கு, தமிழக அரசு மறைமுகமாக கடிவாளம் போட்டுள்ளது. இதன் பின்னணியில் தனியார் பள்ளிகளின் அழுத்தமும், காண்டிராக்டர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சபீதா ஐஏஎஸ், கடந்த மார்ச் மாதம் அதிரடியாக மாற்றப்பட்டார். உடனடியாக அந்த பதவிக்கு உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியராக இருந்தபோதே மக்களிடம் நற்பெயரை சம்பாதித்து இருந்ததால், அவரால் பள்ளிக்கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பல நன்மைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - உதயச்சந்திரன் ஆகியோர் கூட்டணியில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நட...









