பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்
மழைநேர இடியின்போது அர்ச்சுனனை அழைப்பது பழைமை மாறாத மனிதர்களின் வழக்கம். ஆனால், சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தையை சரிக்கட்ட அர்ச்சுனனை அழைக்கின்றனர் இன்றைய சேலம் மக்கள்.
சிறிதுநேரம் நேரடி எப்.எம். பாடலை கொடுத்துவிட்டு, பழ வியாபாரத்தை முடித்து விடும் வித்தியாசமான மனிதர்தான் அர்ச்சுனன். விற்கும் பழம் எதுவோ, அது குறித்தான செய்தியை பாடலாக படித்து விடுவது அவருடைய தனித்த அடையாளம்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த இருபது வருடங்களாக சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கூவி கூவி விற்பதை மாற்றி, பாட்டுப்பாடி பழங்களை விற்பனை செய்துவரும் அவரை சந்தித்தோம்.
"எதையாவது இட்டுக்கட்டி பாடுவது சிறுசிலிருந்தே பழகி போச்சுங்க. ஒரே இடத்துல உக்காந்து விக்காம, அவிங்க இடத்துக்கே போய் வியாபாரம் செய்யறது சரின்னு தோணுச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு ப...




