சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன.
மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி...









