Wednesday, April 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: salem

கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு
ரஜினிகாந்த், 'போர் வரட்டும், அதுவரை காத்திருங்கள்' என்று எதை நினைத்து சொன்னாரோ... ஆனால், சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் அக்கப்போர்களால் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளும் அடியோடு முடங்கியுள்ளன.   கோஷ்டி பூசல்   திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற வளர்ந்த கட்சிகளுக்கே உரித்தான கோஷ்டி பூசல்களைக் காட்டிலும், இன்னும் முளை விடவே ஆரம்பிக்காத ரஜினி மக்கள் மன்றத்தில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன.   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார்.   சலசலப்பு   பாபா முத்திரை, இணையம் வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகளால் வேகமெடுத்தது ரஜினி மக்...
உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.   130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.   பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு ...
அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்...
ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ரஜினி, தன் படங்களை ஓட வைப்பதற்காகத்தான் அவ்வப்போது அரசியல் வருகை குறித்த செய்திகளைச் சொல்லி பரபரப்பை கூட்டுகிறார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் '2.ஓ' படத்துக்கான டிக்கெட் விற்பனையை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் ரசிகர் மன்றங்களுக்கு, ஒரே நாளில் 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செந்தில்குமாரை கடந்த அக். 23ம் தேதி நியமித்து ரஜினிகாந்த் அறிவித்தார்.   அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் மகன் என்ற அடையாளம் மட்டுமின்றி, இடையில் சில ஆண்டுகள் தேமுதிக கட்சியிலும் களமாடியவர் என்பதால் அரசியல் செயல்ப...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர். தண்டவாளத்தில் சடலம்   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண...
மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.   முதன்முதலாக சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   21ம் தேதி வரை திருவிழா   சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு ...
விதி மீறல்: ஒரே இரவில் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்!

விதி மீறல்: ஒரே இரவில் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட சொகுசு பேருந்துகளிடம் இருந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூலித்தனர்.   சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களில் பணியாற்றி வரும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.   இதற்காக அரசுத்தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் லட்சகணக்கானோர் பயணிக்கும் நிலையில், பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.   கட்டணக் கொள்ளை   இதுபோன்ற விழாக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். &nb...
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,...
ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள  அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   சிறுமி ராஜலட்சுமி   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்த...
சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாறுதல் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 1, 2018ம் தேதி முதல் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியர்கள் பின்வருமாறு...   (புதிய பணியிடங்கள் பெயர்களுக்கு நேராகவும், பழைய பணியிடங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன). 1. அ.பெ.பெரியசாமி - சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர் (காடையாம்பட்டி வட்டாட்சியர்)   2. ஜி.குமரன் - ஓமலூர் (சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர்)   3. கே.சித்ரா - சேலம் தெற்கு தனி வட்டாட்சியர் (ஓமலூர்)   4. பி.அன்புக்கரசி - பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ அலகு-1) 5. ஜி....