Sunday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: salem

சேலத்தில் ‘வாஷ் அவுட்’ திமுக; உள்ளடி வேலையால் ‘உள்ளதும்’ போச்சு!

சேலத்தில் ‘வாஷ் அவுட்’ திமுக; உள்ளடி வேலையால் ‘உள்ளதும்’ போச்சு!

அரசியல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மற்றெந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத கூடுதல் அனுகூலம் திமுகவுக்கு இருந்தது. ஆளுங்கட்சி அந்தஸ்து, ஜம்போ கூட்டணி, பண பலம், எண்ணற்ற நலத்திட்டங்கள் என பல சாதகமான அம்சங்கள் இருந்தும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. சேலம் மாவட்டத்தில் 2011க்குப் பிறகு மீண்டும் 'வாஷ் அவுட்' ஆகியிருக்கிறது திமுக. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் வாரிச் சுருட்டியது. 2016, 2021 தேர்தல்களில் சேலம் வடக்குத் தொகுதியை மட்டும் திமுக வசப்படுத்தியது. மற்ற 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியது. இந்நிலையில், 2026 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் கைவசம் இருந்த ஒற்றைத் தொகுதியையும் இழந்து மொத்தமாக 'வாஷ்அவுட்' ஆகியிருக்கிறது சூரியக்கட்சி. எடப்பாடி பழனிசாமி மண்ணில் அடியோடு மண்ணைக் கவ்வ நேர்ந்ததில் அறிவாலய மேலிடமோ ரொம்பவே அப்ச...
சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் வாரிச் சுருட்டும் நோக்கில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நா.த.க., த.வெ.க., கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. வெற்றி நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். கெங்கவல்லி (தனி): இத்தொகுதியில், திமுக தரப்பில் மாஜி எம்எல்ஏ சின்னதுரை களமிறங்கியுள்ளார். தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் பெரிய அளவில் பெண்களிடம் 'ரீச்' ஆகியிருப்பது இவருக்கு பலம். அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., நல்லதம்பி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. எனினும், மக்களிடம் இவர் மீது அதிருப்தியும் இல்லை. தம்மம்பட்டி பேரூர், உலிபுரம், நாகியம்பட்டி, ஜக்கமசமுத்திரம் பகுதி வரை திமுகவுக்கும், கெங்கவல்...
தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

தேர்தல் 2026: சேலத்தில் கோட்டையைப் பிடிக்குமா திமுக?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது. அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகள...
திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை, முக்கிய செய்திகள்
''இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,'' என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார். ''வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,'' என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர். இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ''தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,'' என்றார். ''சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பே...
அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ராஜேந்திரன், அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உள்பட மொத்த...
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்திக்...
மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை இன்று (செப். 7) மதியம் 1.09 மணியளவில் முழு கொள்ளளவை எட்டியது. 43வது முறையாக அணை முழுவதும் நிரம்பியுள்ளது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த அணை நிரம்பினால், காவிரி படுகையையொட்டி உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனினும் இந்த அணையின் நீர் இருப்பு என்பது, கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர் கொள்ளளவைப் பொருத்தும், அந்த மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக அணையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...
சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வேறுபாடு நூலிழை அளவே என்பதே இயற்கைக் கோட்பாடு. கொஞ்சம் அசந்து இருந்தாலும் இந்நேரம் அம்மா உணவகமாக மாறி இருக்க வேண்டிய ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்று முந்நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிதான், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. அத்தகைய அளப்பரிய உழைப்பிற்குச் சொந்தக்காரர், கார்த்திகேயனி (50). அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். நாம் அந்தப்பள்ளியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பார்வையிட்டோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்து பார்த்தோம். அவை குழந்தைகள் அமர இடமின்றி பிதுங்கி வழிந்தன. அந்தளவுக்கு மாணவர் சேர்க்கை அபரிமிதமாக இருந்தது.   கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளிதான் கடை...