Wednesday, April 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: salem

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலி என்கவுண்டரில் தீர்த்துக்கட்டிவிட்டு, மாவட்டக் காவல்துறையினர் என்கவுண்டர் நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.   ஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார். என்கவுண்டரை தொடர்...
சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம்: அதிமுக வேட்பாளருக்கு பாமக ‘டிக்டேட்’!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக வேட்பாளர், பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறியபோது, அவரை மேற்கொண்டு பேச விடாமல் பாமக நிர்வாகி அருள் அழைத்துச்சென்றது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மக்களவை தொகுதியில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது. கடந்த 22ம் தேதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திங்கள்கிழமை (மார்ச் 25, 2019) சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது பெயர் ராசி, நட்சத்திரம், நல்லநேரம் பார்த்து குளிகை காலத்தில் பகல் 2.40 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் அருள் (பாமக), ராதாகிருஷ்ணன் (தேமுதிக), கோபிநாத் (பாஜக) ஆகியோர் வேட்புமனு தாக்கலின்போது உடன் இருந்தனர்.   முன்னதாக, சேலம...
சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால் சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில் தத்தளிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.   ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் ப...
”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

அரசியல், குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான நில அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது. 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அலைக்கழித்ததில் இறந்தே போனார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும் இப்போது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.   ''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிற...
52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய ஏஸ் பவுண்டேஷன்! தெற்கில் இருந்து புறப்படும் மகளிர் படை!!

சேலம், தமிழ்நாடு, மகளிர், மதுரை, முக்கிய செய்திகள்
சேலத்தில் 52 ஆயிரம் பெண்கள் சேர்ந்து 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation)என்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் மாபெரும் கூட்டமைப்பை தொடங்கி உள்ளனர். இந்தியா முழுவதும் இயங்கி வரும் அமைப்பு ரீதியற்ற பெண்கள் குழுக்களை ஒருங்கிணைக்கும் முகமாக புதிய பயணத்தை தொடங்கியுள்ளது இந்த மகளிர் படை. இது முற்றிலும் அரசியல் சார்பற்ற அமைப்பு.   தானம் அறக்கட்டளையின் ஓர் அங்கமாக இயங்கி வந்த களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழு, இன்று முதல் (பிப்ரவரி 9, 2019) 'ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பினூடாக தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதாவது, தானம் அறக்கட்டளைக்கும் இப்புதிய அமைப்பிற்கும் இனி யாதொரு தொடர்பும் இருக்காது. இப்படியொரு துணிச்சலான முடிவை, சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இயங்கி வரும் 52 ஆயிரம் பெண்கள் கூட்டாக தீர்மானித்துள்ளனர். இந்தக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிர்வாகத்தி...
சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வராக இருதயவியல் துறை மருத்துவர் திருமால்பாபு (55) இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார்.   சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் புதிதாக முழுநேர முதல்வர்களை நியமித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 12ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வ...
பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி ...
சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.   சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து வருகிறது.   இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு இந்துசமய அறநிலைய உதவி ஆணையர் தமிழரசு கேட்டுள்ளார். அவ்வாறு இனாம் கொடுத்தால்தான், இனி வரும் காலத்திலும் கோயில் மராமத்துப்பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மிரட்டி வந்துள்ளார். லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய அறையில் வந்து கொடுக்கும்பட...
சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.   சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 13) காலை காவல்துறை ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....' என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம் இருந்த நிலையில், பலர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்குத்தி கவுண்டர், 'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன... கொஞ்சமாவது வயசுக்கு மரியாதை கொடுங்க,' என்று கூறினார்.   இதனால் ஆத்திரம...
துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.   பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.   படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.   பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க...