Saturday, January 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Salem Corporation

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம் மாநகராட்சியில் பல கோடி ரூபாய் கையாடல்; தணிக்கை அறிக்கையில் ‘ஷாக்’

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாயில் பல கோடி ரூபாய், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு போலி ரசீது மூலம் கையாடல் செய்துள்ள அதிர்ச்சி தகவல் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை என நான்கு மண்டலங்களும், 60 கோட்டங்களும் உள்ளன. இம்மாநகராட்சியின் 2023-24ம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகள், அண்மையில் உள்ளாட்சித் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், சூரமங்கலம் மண்டல கணக்கு வழக்கு விவரங்களை தணிக்கை செய்ததில், பல கோடி ரூபாய் கையாடல் நடந்திருப்பதும், மாநகராட்சிக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விவரங்கள்: தணிக்கை அறிக்கையின் ஒரு பகுதி சேலம் மாநகராட்சி மையஅலுவலகத்தில் இருந்துசொத்துவரி, தொழில் வரி,பிறப்பு - இறப்பு படிவம்,சொத்து...
சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம்: வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள் கோஷ்டி மோதல்; தொங்கலில் விட்ட அமைச்சர்கள்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மார்க்கெட் இரண்டாக உடைந்ததோடு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. வ.உ.சி. பூ மார்க்கெட் சேலம் மாநகர மையப்பகுதியில் 100 ஆண்டுகள்பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட்இயங்கி வருகிறது.பழைய கட்டடத்தில்இயங்கி வந்த இந்த வளாகம்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,புதிதாக கட்டுவதற்காககடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது.14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில்நான்கு தளங்களுடன் புதிதாகவ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம்கட்டி முடிக்கப்பட்டது.கடந்த 2023 ஜூன் 11ம் தேதி,தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.இதில் மொத்தம் 240 கடைகள்கட்டப்பட்டு உள்ளன. சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில்உள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்குவரும் வியாபாரிகள், விவசாயிகளிடம்சுங்கம் மற்றும் கடை வாடகைவசூலிக்கும் உரிமத்திற்கானபொது ஏலம் கடந்த 2023 நவம்பர்மாதம் நடத்தப்பட்டது.சே...
அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

அரங்கேறிய கூட்டுக்களவாணித்தனம்: சிக்கப்போகும் ஐஏஎஸ்; கிலியில் பொறியாளர்கள்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியில் ஐஏஎஸ் அதிகாரி, பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் கூட்டாக நடத்திய பணி நியமன ஊழல் விவகாரத்தில் அவர்களின் ஒட்டுமொத்தத் தலைகளும் உருளப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில், ஸ்கில்டு அசிஸ்டன்ட் (கிரேடு - 2) எனப்படும் இரண்டாம் நிலை செயல்திறன் உதவியாளர் காலியிடங்கள் கடந்த 2022ம் ஆண்டு நிரப்பப்பட்டது. இந்தப் பிரிவில் மொத்தம் 6 காலியிடங்கள் இருந்தன. இதற்காக, 9.12.2022ம் தேதி நேர்காணல் நடந்தது. மொத்தம் 55 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். குறைந்தபட்சக் கல்வித்தகுதி ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்பணிக்கான ஊதிய விகிதம் 19500 - 62500 ரூபாய். குறைந்தபட்ச கல்வித்தகுதி, நல்ல சம்பளம், உள்ளூரிலேயே வேலை என்பதால், 6 செயல்திறன் உதவியாளர் பணியிடங்களையும் சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், ஆளும்...
திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

சேலம், முக்கிய செய்திகள்
''அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,'' என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''என்ன பேனாக்காரரே... வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு...?'' என கேட்டபடியே, சூடான தேநீரை எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி. ''அது ஒண்ணுமில்ல... ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி, மாங்கனி மாவட்டத்துல ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான 'நேதாஜி' பெயர் கொண்ட ஒருத்தரு, மாவட்டத்தைக் கட்டி ஆளும் கருமேக அதிகாரியும், மாநகராட்சியின் முக்கிய அதிகாரியான 'இயக்குநர் சிகரம்' பெயர் கொண்ட அதிகாரியும் இலைக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவருடைய குரல் பதிவுதான், சமூக ஊடகங்களில் வைரல் ஆகிட்டு இருக்கு.   அவரை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டதும் கூட ஆளுங்கட்சியின் முக...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன.   சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.   இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   மாநகராட்ச...
சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம், முக்கிய செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை, ஆணையர் கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை (டிச. 9) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகன் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.   இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் கூறியது:   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 1.11.2021ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் கொகுதி ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவுப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.   வாக்காளர் பட்டியல்கள் அடிப...
சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணியவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே 500 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வியாழன் (ஏப். 16) முதல் அமலுக்கு வருகிறது.   கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், இப்போதைக்கு தனிமைப்படுத்தலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 மாலை வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டத...
சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.   சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே ...
சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம் மாநகராட்சிக்கு அபராதம் விதிப்போம்! அருண் நகர் மக்கள் நூதன முழக்கம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களே அபராதம் விதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று அருண் நகர், ராஜராஜன் நகர் பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வந்தாலும் வந்தது, சேலம் மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி எல்லாம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. என்னதான் சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக நிலை உயர்த்தப்பட்டாலும், நகர் ஊரமைப்பு பொறியியலில் அரை நூற்றாண்டு காலம் பின்தங்கி இருக்கிறது எனலாம்.   சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சாலைகள்; கால்வாய்கள், ஒழிக்கவே முடியாத கொசுத்தொல்லை, அவற்றால் உண்டாகும் காய்ச்சல் என அவலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது, மாம்பழ மாநகராட்சி. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அடிக்கடி பெய்து வரு...
சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலத்தில் நடுத்தெருவில் உருவான திடீர் கழிவு நீரோடை! மாநகராட்சி மனசு வைக்குமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவு நீர் வெளியேறி, நடுத்தெருவில் ஓடையாக பாய்ந்தோடுவதால், சாலையும் சிதிலமடைந்துள்ளதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. சேலம் சின்னத்திருப்பதி பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில் எதிரில் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு உள்ளது. அதன்மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் பொதுவாக உள்ள இந்த சாலை வழியாகத்தான் அஸ்தம்பட்டி - ஏற்காடு முதன்மைச் சாலைக்கு வந்தடைய வேண்டும். அதனால் எப்போதும் இந்த சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகம்.   கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பாதாள சாக்கடைக் குழி மீது போட்டப்பட்டிருந்த சிமெண்ட் மூடி திடீரென்று உடைந்தது. அன்று முதல், அந்தக் குழி வழியாக கழிவு நீர் பெருக்கெடுத்த...