Sunday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Salem Corporation

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள் ...
சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.   கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிக...