Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: police

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.   சேலம் - சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று...
எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை செய்ய எதிர்ப்பு; விவசாயிகளை மிரட்டிய போலீசார்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு கடுமையாக வலுத்துள்ள நிலையில், இன்று (ஜூலை 23, 2018) மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை கைது செய்து விடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், 186 ஹெக்டேர் நிலங்கள், தனியார் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள் ஆகும்.     சேலம் மாவட்டம் ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, குப்பனூர், நிலவாரப்பட்டி, சித்தனேரி, பாரப்பட்டி, பூலாவாரி அக்ரஹாரம் உள்ளிட்ட 20 கிராமங்களின் வழியாக எட்டு வழிச்சாலை செல்கிறது. விவசாய நிலத்தை அழித்துப் போடப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக...
படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி   

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி  

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறும் அதிகாரிகள், படிக்காத விவசாயிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள்? என பொதுமக்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.   சேலம் மாவட்டத்தில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடங்கள், ஏற்கனவே அளக்கப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு உள்ளன. அந்தப் பகுதிகளில் தற்போது துல்லிய அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குள்ளம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 16, 2018) துல்லிய அளவீடு நடந்தது. இதற்காக தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், சர்வேயர்கள் இன்று காலை குள்ளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட முப்பதுக்கும் ம...
மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை…  எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!

மார்வாரிகளால் போலீசார் காட்டில் மழை… எடப்பாடி மாவட்டத்தில் சக்கப்போடு போடும் போதைப்பொருள் வர்த்தகம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் வர்த்தகம் கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக மார்வாரி சமூகத்தினர் இந்த வணிகத்தில் ஏகபோகமாக திளைத்து வருவதோடு, அவர்களைக் கண்டும் காணாமலும் இருக்க காவல்துறையினர் காட்டிலும் பண மழை கொட்டி வருகிறது.     குட்கா, ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு நடுவண் அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ள நிலையில், சேலம் மாநகரில் மட்டும் தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலம் மாவட்டத்திலேயே இந்தப் பொருள்கள் தடையில்லாமல் கிடைப்பது பல மட்டத்திலும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.   மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி ரெய்டுகள் நடத்தி, ...
‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு  நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜை, நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில், அவரை ஜீப்பில் அழைத்துச்சென்று போலீசார் ஊர் சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி (67). இப்பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப்பணியில் சேர்ந்துள்ளார். சில விதிகளை மீறி, சுரேஷை உதவிப்பேராசிரியராக நியமிக்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி கேட்டுள்ளார். அதை தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ், கொஞ்சம் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். அந்த நம்பிக்கையின்பேரில் அவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால...
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச்சென்ற தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டுக்கொன்றார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கொளத்தூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாதுராம் மற்றும் கூட்டாளிகளைத் தேடி ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கடந்த 13ம் தேதி, நாதுராம் கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்...
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க...
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார். ...
சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 414 ரூபாய்தான் கூலி; அதுவும் 14 மாசமா கொடுக்கல! தற்கொலைக்கு தள்ளும் மாவட்ட நிர்வாகம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சேலத்தில், உழைக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சொற்ப கூலியைக்கூட 14 மாதமாக வழங்காமல் போக்குக் காட்டிவரும் மாவட்ட நிர்வாகத்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.   சமூகநலத்துறையின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகங்கள் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு எதிரில் அய்யந்திருமாளிகையிலும், பெத்தநாயக்கன்பாளையத்திலும் செயல்பட்டு வருகிறது. பெற்றோரில் யாராவது ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த பெண் குழந்தைகள் இந்தக் காப்பகத்தில் தங்க வை க்கப்படுகின்றனர். 5 வயது முதல் 18 வரை இந்தக் காப்பகத்தில் தங்க வைத்துப் பாதுகாப்பதுடன், அரசுப்பள்ளியில் படிக்க வைத்தும் வருகிறது. தாய், தந்தை இருவரையும் இழந்த பெண் குழந்தை எனில், அவர்களுக்கு 21 வய...
ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி...