Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதால், நூலகத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்க...
பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின்ஸ்டார் சிவக்குமார், செட்டில்மென்ட் கமிஷன் முன்பும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.   சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந...
பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி...
எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ...
சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வேறுபாடு நூலிழை அளவே என்பதே இயற்கைக் கோட்பாடு. கொஞ்சம் அசந்து இருந்தாலும் இந்நேரம் அம்மா உணவகமாக மாறி இருக்க வேண்டிய ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்று முந்நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிதான், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. அத்தகைய அளப்பரிய உழைப்பிற்குச் சொந்தக்காரர், கார்த்திகேயனி (50). அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். நாம் அந்தப்பள்ளியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பார்வையிட்டோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்து பார்த்தோம். அவை குழந்தைகள் அமர இடமின்றி பிதுங்கி வழிந்தன. அந்தளவுக்கு மாணவர் சேர்க்கை அபரிமிதமாக இருந்தது.   கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளிதான் கடை...
28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை அதே பணியிடத்திற்கு அமர்த்தி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சிஇஓ) பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் காக்கா கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.   குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் வி...
சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ல் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 5ல் வெளியாகின.   இத்தேர்வில், சேலம் அழகாபுரம்புதூர் ராஜாராம் நகரைச் சேர்ந்த மஹாநேருராஜ் - ராதிகா தம்பதியின் மகள் மஹாதர்ஷினி 596 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்ட அளவில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 முடித்த மஹாதர்ஷினி, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 235 மதிப்பெண்கள் பெற்றார். ஆனாலும், மருத்துவர் கன...
அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பேராசிரியர் நிலையிலான மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு, மருத்துவமனைக் கண்காணிப்பாளராக (எம்.எஸ்.) பதவி உயர்வு வழங்கி, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை (ஜூன் 14, 2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.   முன்னதாக, மருத்துவக் கண்காணிப்பாளராக (Medical Superintendent) பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 20 மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பாளராக பணியாற்ற இசைவு தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களில் பணிமூப்பு, நிர்வாகப் பணிகளில் முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பத்து பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களில் மூன்று பேர் மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் இருவர் கண் மருத்துவத்துறையையும், இருவர்...
சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.   இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.   சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள...
”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ரசிகன் பக்கம்)     இளையராஜா...   இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, 'இசையமைப்பாளர் இளையராஜா' என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.   மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். 'வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா...' என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் 'ஓரம்போ... ஓரம்போ...' என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.   அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இ...