Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஒரு மாத காலம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். இன்று மாலை அவர், வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக பேரறிவாளன் உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை காண்பதற்கு பரோலில் விடுவிக்கும்படி, பேரறிவாளன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய தாயார் அற்புதம்மாளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பேரறிவாளனை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இ...
அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

அந்தரங்கத்தை உளவு பார்க்கக் கூடாது : ஆதார் வழக்கில் ‘குட்டு’

இந்தியா, முக்கிய செய்திகள்
புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும்  செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சம்: ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதா...
நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என நடுவண் அரசு கைவிரித்து விட்டது. இதனால், நீட் தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை உடனடியாக துவக்கி செப்டம்பர் 4ம்தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‛நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மாணவர் சேர்க்கை உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (22/8/17) விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை செப்டம...
ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ரேஷன் மானியம் ரத்து குறித்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய அரசாங்கம் என்பது, சாமானிய மக்கள் நலன் நாடும் அரசு என்ற எண்ணவோட்டத்தில் இருந்து விலகிச்சென்று, கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டுமே இனி சேவகம் செய்யும் என்ற நிலைக்கு தன்னை உருமாற்றிக் கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பதுதான் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஷரத்து. இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வந்தார். அதற்கு மக்கள் நலன் மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அரசியலும் ஒன்று இருக்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஏனைய மாநில...
கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையானது, அடுத்தக் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கொள்கை முடிவெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்தில் 20 கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு இசைவும் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால், விளிம்பு நிலை மக்களுடைய பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆசிரியர்கள் தரப்பில் கணிசமான வரவேற்பும் பெற்றுள்ளது. இந்திய அரசு, 'காட்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே இனி, இந்தியாவில் கல்வி என்பது 100% வணிகமாகிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர...
காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

இந்தியா, முக்கிய செய்திகள்
புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'நெட்டிசன்'களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புட...
கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

இந்தியா, முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவர் ஒருவரின் மனிதநேயமிக்க முயற்சியால் பல குழந்தைகளின் உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. கோரக்பூர். பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மூளைவீக்க நோயால் 60 குழந்தைகள் இறந்தது இங்கேதான். குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூளைவீக்க சிகிச்சைப் பிரிவின் தலைவருமாக இருக்கிறார். 10ஆம் தேதி இரவு. ஆக்சிஜன் குறைபாட்டால் அபாய எச்சரிக்கை பீப் சத்தம் ஒலிக்கிறது. அவசர கால சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் இது இரண்டு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு? மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றித் தேவை, அதுதான் அவர்களின் உயிர்காக்கும் மருந்து. இதுவும் அந்த மருத்துவருக்கு நன்றாகத் தெரியும். ஆக்...
மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, ...
சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

சோழர்கள் வரலாறு புறக்கணிப்பு…! -அறம் கிருஷ்ணன்

இந்தியா, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  ஓசூரில் 100 தொழிலாளர்களுடன் இயங்கும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர். அலட்டல் இல்லாத கவிஞர். 'கவிக்கோ' அப்துல் ரஹ்மான், வைரமுத்து, அறிவுமதி ஆகியோரை வைத்து மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.   இவற்றையெல்லாம் விட அவர் பெருமையும், மன நிறைவும் அடைவது தன்னை ஒரு 'வரலாற்று ஆய்வாளர்' என்று சொல்லிக்கொள்வதில்தான் என்றால் மிகையாகாது. இப்படி பன்முகத்தன்மையுடன் திகழ்பவர்தான், 'அறம்' கிருஷ்ணன். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: உங்கள் பெயரின் முன்னொட்டாக 'அறம்' ஒட்டிக்கொண்டது எப்படி?   அறம் கிருஷ்ணன்: எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் காரணமாக, 'அறம் இலக்கிய அமைப்பு' என்ற அமைப்பை தொடங்கினேன். அதன்மூலம், ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி வருகிறோம். அறம் என்றாலே கொடுப்பதுதானே.   அதனால் விழா நடைபெறு...
பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் இந்தியா: சொல்கிறது ஐஎம்எஃப்

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்...