டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு ஆண்டில் அபரிமிதமாக இருக்கும் என்றும், சீனாவை பின்னுக்குத் தள்ளி வேகமாக வளரும் என்றும் சர்வதேச நிதியகம் (ஐ.எம்.எப்) தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.ன் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். இருந்தாலும், நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவால் மிகுந்ததாக இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்திருந்தார்.
ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானது. இதில் துவக்கத்தில் சிறிது காலத்துக்கு மந்தநிலை காணப்பட்டாலும், இது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐஎம்எஃப் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை நிரூபிப்பதுபோலவே கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஆண்டில் 7.1 சதவிதமாக குறைந்தது.
பொருளாதார நிபுணர்கள் இருந்தாலும் மத்திய அரசின் உறுதியான பொருளாதார நடவடிக்கையினால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஐஎம்எஃப் இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அபரிமிதமாக இருக்கும் என்றும் மேலும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மிக வேகமாக வளர்ச்சி பெறும் என்றும் சர்வதேச நிதியகம் தன்னுடைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கை மேலும், வரும் 2018ம் ஆண்டில் இந்த வளர்ச்சியானது அதிகரித்து 7.7 சதவிகிதமாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், அதே சமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது நடப்பு ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் 2018ம் ஆண்டில் 6.4 சதவிதிதமாக குறைந்துவிடும் என்றும் தன்னுடைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் வளர்ச்சி அதே சமயம், சர்வதேச பொருளாதார வளர்ச்சியானது 2017ம் ஆண்டில் கடந்த ஆண்டைப் போல 3.5 சதவிகிதமாகவும் 2018ம் ஆண்டில் 3.6 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.