Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,...
பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (பிப்ரவரி 6, 2018) சரிவுடன் தொடங்கின. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டிற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் கடும் சரிவுடன் பங்குச்சந்தைகள் முடிவு பெற்றன. இதன் தாக்கம் மறுநாளும் தொடர்ந்தது. 2ம் தேதியன்றும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் தொடங்கின. இந்நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகள் இன்றைக்கு எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்கா டாலருக்கான தேவை அதிகரிப்பு, அந்நாட்டு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் பெரும் சரிவுடன் இன்று தொடங்கியது. தைவான், ஜப்பான் நாடுகளிலும் பங்குச்சந்தைகள்...
கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கியூபா தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. இறந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1, 2018) அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்தா டயஸ்&பாலார்ட். அவருக்குப் பிறந்த ஒரே மகன்தான், இப்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டியஸ்-பாலார்ட். இவர், 'ஃபிடலிட்டோ' என்றும் அந்நாட்டு மக்கள் அழைத்து வந்தனர். ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'கிரான்மா', ''கடந்த பல மாதங்கங்...
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு...
மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு...
பட்ஜெட்:  நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

பட்ஜெட்: நடுத்தர வர்க்கத்தினருக்கு பெருத்த ஏமாற்றம்!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரும், சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததால், பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நடுவண் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலை 11 மணியளவில் வாசிக்கத் தொடங்கினார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகான பட்ஜெட் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும், பாஜக அரசின் கடைசியாக வாசிக்கும் முழு ஆண்டுக்கான பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகைகளும் எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் 8.27 கோடி வரி செலுத்துவோர் உள்ளனர். அவர்களில் 1.88 கோடி பேர் மாத சம்பளக்காரர்கள். மாத சம்பளம் பெறுவோருக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை. முந்தைய நிலவரம் அப்படியே தொடரும். நிரந்தர கழிவு முறை மீண்டும் தொடரும். அதன்படி, ரூ.40 ஆயிரம் நிர...
21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

21 மில்லியன் ‘தேவையற்ற குழந்தைகள்’!; பெண்களை வெறுக்கும் இந்திய சமூகம்

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில், 21ம் நூற்றாண்டிலும் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமே அதிகளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் நடந்த ஓர் ஆய்வு, இந்தியாவில் 21 மில்லியன் 'தேவையற்ற பெண் குழந்தைகள்' இருப்பதாக கூறுகிறது. உலகளவில் பாலின சமத்துவத்தில் ஐஸ்லாந்து நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 1.1.2018 முதல் அந்த நாட்டில், பெண் ஊழியர்களைக் காட்டிலும் ஆண்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதைக்கூட தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. அதுபோன்ற உயரிய சிந்தனைகளை எட்டிப்பிடிக்க, இந்தியாவிற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு அப்படித்தான் சொல்ல வைக்கிறது. ஆனால், நாம்தான் மூச்சுக்கு முன்னூறு முறை பூமி முதல் நதிகள் வரை பெண்களின் பெயரால் அழைப்போம். அதுவே, ஆகப்பெரிய நகைமுரண். பாலின சமத்துவம் குறித்து நாம் என்னதான் டிவி, பத்திரி...
இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

இளையராஜாவை அவமதித்த நாளிதழை காறி துப்பிய நடிகை கஸ்தூரி!; ட்விட்டரில் குவியும் பாராட்டு

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது குறித்த செய்தியை, அவரின் சாதி பெயரைச் சேர்த்து தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நாளிதழை நடிகை கஸ்தூரி காறி உமிழும் வீடியோ பதிவுக்கு, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அவருடைய பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றுவரை பின்னணி இசையில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இளையராஜாவை, இசைக்கடவுளாகவே கருதும் வெறிபிடித்த ரசிகர்களும் உண்டு. அவரின் திரையுலக சாதனையைக் கவுரவிக்கும் வகையில் நடுவண் அரசு, நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என, கடந்த 25ம் தேதி அறிவித்தது. அடுத்த நாள் (ஜனவரி 26, 2018) காலை பத்திரிகைகளில் இதுதான் தலைப்ப...
”பிச்சை எடுப்பதும் தொழில்தானே!” – மோடியின் ‘பக்கோடா’ பேச்சுக்கு ப.சிதம்பரம் எதிர்வினை

”பிச்சை எடுப்பதும் தொழில்தானே!” – மோடியின் ‘பக்கோடா’ பேச்சுக்கு ப.சிதம்பரம் எதிர்வினை

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களில் பாஜகவின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் கடுமையான சாடி வருகிறார். அவருடைய கருத்துகள், கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் ப.சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ''பக்கோடா விற்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். அதுவும் ஒரு வேலைதானே?. அதைச் செய்பவர்களை வேலை இல்லை என்று எப்படி கணக்கில் கொள்ள முடியும்?'' என்றார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதெல்லாம் அவருடைய வழக்கமான 'ஜூம்லா' (தேர்த...
விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி

விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான இன்று (ஜனவரி 29, 2018), நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வந்த அவரை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர். ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவு பணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாக கூறினார். அதன் பின்னர், நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த அறிவிப்பின்போதும் புதிய இந்தியா பிறந்ததாகக் கூறினார். அடிக்கடி அவருடைய உரையில் புதிய இந்தியா பற்றி குறிப்பிடுவது வழக்கமானதாகிவிட்டது. இன்று உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2018ம் ஆண்டு புதிய இந்...