Tuesday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

உடல் பருமனான பெண்கள் பேரல் போன்றவர்களா? தனியார் ஜிம் மீது பாய்ச்சல்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இலங்கையில் உள்ள ஓஸ்மோ என்ற தனியார் உடற்பயிற்சி நிறுவனம் (ஜிம்), உடல் பருமனான பெண்களை பீப்பாயுடன் (பேரல்) ஒப்பிட்டு வைத்திருந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்நிறுவனத்தை இணையவாசிகள் தொடர்ந்து புரட்டி எடுத்து வருகின்றனர். உடல் பருமன் இன்று இளைய தலைமுறையினரை வாட்டி எடுக்கும் பிரச்சனையாக உள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உடல் பருமன் சமூக பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. மாறிவரும் உணவு பழக்கம், முறையற்ற வேலை நேரம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால், ஆண், பெண் என இருபாலினத்தவரும் பாதிக்கப்பட்டாலும், பெண்கள் அதனால் பலராலும் பொதுவெளியில் அவமானபடுத்தப்படுகின்றனர். உடற்பயிற்சி கூடங்களில் விளம்பரம் கூட பெண்களை மையப்படுத்திதான் உள்ளது. பெண்கள் இந்த வடிவத்திலும், அளவிலும் இருக்க வேண்டும் என்றே...
ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!

ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்கள் வெளியிடப்பட்டது குறித்த விவகாரத்தில், இந்திய தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அதிபர் முகேஷ் அம்பானி ஓராண்டுக்கு முன்பு, ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஜியோ விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி சேனல்களில் தொடர்ந்து வெளியாகின. அம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களுக்காகவே பிரதமர், வேலை செய்வதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த விளம்பரங்கள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படம் வெளியிட முறையான அனுமதி வழங்கப்பட்டதா? என்பது க...
அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

அடுத்தது குளோனிங் மனிதன்தான்!; ‘குரங்குகள் வந்தாச்சு’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
தொழில்நுட்ப யுகத்தில், சாத்தியமற்றவைகளை எல்லாம் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம். இப்போது குளோனிங் (Cloning) குரங்குகள் வந்தாச்சு. அடுத்த சில ஆண்டுகளில் குளோனிங் மனித உருவாக்கமும் சாத்தியமே என்ற யூகங்கள் வலுவாக எழுந்துள்ளன. இயற்கையோடு இயைந்தும், அதை எதிர்த்தும் போராடுவதுதான் விஞ்ஞான உலகம். அடுத்த சந்ததியை உருவாக்க உடல் சேர்க்கையே தேவையில்லை என்பதை 20ம் நூற்றாண்டு சாத்தியமாக்கியிருந்தது. அதன் நீட்சி, குளோனிங் தொழில்நுட்பம். ஒருவரை அப்படியே நகலெடுப்பதுதான், குளோனிங். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குளோனிங் மூலம் டாலி என்ற செம்மறி ஆடு, ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டபோது விஞ்ஞானத்தின் உச்சம் என்றும், மனித குலத்திற்கு ஆபத்து என்றும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அறிவியாலாளர்கள் குளோனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் அரிதிலும் அரிதான நோய்களைக்கூட ம...
ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

இந்தியா, உலகம், தகவல், முக்கிய செய்திகள்
ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும் உலகமே கையில் வந்துவிட்டது போன்ற உணர்வு கிட்டிவிட்டது என்னவோ உண்மைதான். ஓர் அறைக்குள் அமர்ந்தவாறே உலகை அளந்து விடலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு அவரவர் உலகத்தில் தனியே லயித்து கிடப்பது கண்கூடு. ஆனால், ஸ்மார்ட் ஃபோன்களை அதிகமாக பயன்படுத்தும்போது மனிதர்களின் இயல்பு மாறுவதோடு, மகிழ்ச்சியும் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. சர்வே எடுப்பதில் புகழ்பெற்ற அமெரிக்காதான் இதைப்பற்றியும் ஓர் ஆய்வை அண்மையில் மேற்கொண்டது. அந்த நாட்டில் உள்ள ஏதோ ஓர் அமைப்புன்னு வெச்சுங்குங்களேன். அந்த அமைப்பு, சில லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறது. ஆய்வுக்கு உட்பட்ட எல்லோருமே 13 முதல் 19 வயது வரையுள்ள பதின்பருவத்தினர். ஆண், பெண் இருபாலரும் அடக்கம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம், மொபைல், டேப்லெட், கணி...
தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

அரசியல், இந்தியா, காஞ்சிபுரம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ...
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர். அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, 'செயல்படாத சொத்துக்கள்' (NPA - Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன. ...
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார இடைவெளி!; ‘ரிச் கெட் ரிச்சர்’

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்தியாவில் உள்ள 73 சதவீத சொத்துகளும், வளங்களும் நாட்டின் ஒரு சதவீதம் பேரிடம் மட் டுமே குவிந்து கிடப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், இந்தியாவில் ஏழை - பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி ஆண்டுதோறும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்ஃபாம், ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் பொருளாதார இடைவெளி குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளிட்டு வருகிறது. 2017ம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில், 'ரிவார்டு ஒர்க்; நாட் வெல்த்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்பட மொத்தம் பத்து நாடுகளில் 70 ஆயிரம் பேரிடம் இதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளது. கிடைத்த புள்ளிவிவரங்களைக் கொண்டு டபிள்யூ.இ.எப் என்ற உலக பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் ஆய்வுடன் எந்தளவுக்கு ஒத்துப்போகிறது என்பதையும் தெளிவுபடுத்திய பிறகு, தனது அறி க்கையை வெ...
பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?

பூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாச்சாரத்தில் அது மிகப் பெரிய விசேஷமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய விழாவும் நடத்தப்படுகிறது. என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வம் மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன். என் சகோதரி `பெரியவள்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைத்தான் நானும் கேட்டேன். "நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?" என்று நான் கேட்டேன். என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இரு...
49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 25வது அமர்வு டெல்லியில் இன்று (ஜனவரி 18, 2018) நடந்தது. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விபூதி, சர்க்கரை மிட்டாய், 20 லிட்டர் கேன் குடிநீர் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு. ஜனவரி-25 தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்  10 நாட்களுக்கு பிறகு ஜி....
10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் ...