Thursday, October 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.   இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.   இத்தேர்வுக்கு விண்ண...
விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

தகவல், முக்கிய செய்திகள்
பிளஸ்2 முடித்த, விளையாட்டுத்துறையில் சிறந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள Multi tasking staff, Postman, Postal assistant / Sorting assistant பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 231 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2019ம் தேதியன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க, 31.12.2019ம் தேதி கடைசி நாள்.   முற்றிலும் தகுதி (meritorious) அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.   காலியிடம் மற்றும் ஊதிய விவரம்:   போஸ்டல் அசிஸ்டன்ட்: 89 சம்பளம்: ரூ.25500 - ரூ.81100 போஸ்ட்மேன்: 65 சம்பளம்: ரூ.21700 - ...
நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது.   சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்' எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜி...
பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி வகுப்பறையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் கணித ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளி சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரகாஷ்குமார் (54) என்பவர், இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, ஆசிரியர் பிரகாஷ்குமார், 6ம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளிடம் வகுப்பறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுமிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் அன்றே கூறியிருக்கின்றனர். அதன்பேரில், பெற்றோர்கள் இதுபற்றி பள்ளித்தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரியை நேரில் சந்தித்துப் பு...
ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6...
ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

ஊழலில் திளைக்கும் ‘டாப் – 3’ துறைகள்! ஆய்வில் புதிய தகவல்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஊழலில் திளைக்கும் முதல் மூன்று துறைகள் என்னென்ன? எத்தனை பேர் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள், டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடி வரும் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா (டிஐஐ) என்ற தன்னார்வ அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் மலிந்த நாடுகளை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. அரசு மற்றும் சார்பு நிறுவன ஊழியர்கள் தங்களின் கடமையைச் செய்ய அல்லது கடமைகளைச் செய்யாமல் இருக்க கையூட்டு பெறுவதையே ஊழல் என வரையறுக்கிறது இந்திய தண்டனை சட்டம்.   ஊழல் தடுப்பு சட்டம்-2018ன் படி, லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கிறது. மேலும், அவ்வாறு லஞ்சம் கொடுப்பவருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்...
சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.   சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே ...
வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உருண்டை வெல்லம் என்றால் அதன் தித்திப்பு சுவை மட்டும்தான் நினைவுக்கு வரும் என்று நினைத்தால் அது உங்களின் அறியாமைதான். ஏனெனில், கரும்புச்சாறை பிழிந்து, காய்ச்சி தயாரிக்கப்படும் வெல்லத்தில் கரும்புச்சாறு மட்டுமின்றி சூப்பர் பாஸ்பேட் உரம், சோடியம் ஹைட்ரோசல்பைடு சலவைத்தூள் ஆகிய வேதிப்பொருள்களும், இன்ன பிற நிறமூட்டிகளும் கலந்திருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது உணவுப்பாதுகாப்புத்துறை.   சேலத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் பரவலாக வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. தைப்பொங்கலை குறிவைத்து இப்போது வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் மட்டுமின்றி இனிப்பு பண்டங்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதால், எல்லா காலத்திலும் உருண்டை வெல்லத்திற்கு மிகப்பெரும...
நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

நீங்கள் மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துபவரா? நோமோபோபியா குறைபாடு வரலாம்…!!

சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
எது உங்களை இன்று வசியப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுவே உங்களை வீழ்த்தும் ஆயுதமாகவும் மாறலாம். அதில் உங்களிடம் உள்ள கைபேசிகளும் (மொபைல் போன்) விதிவிலக்கு அல்ல. நான், உங்களை அச்சமூட்டுவதற்காக இப்படி சொல்லவில்லை. ஆனால், உலகளவில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப அடிமைகளைப் பற்றியே சொல்ல விழைகிறேன். தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கைபேசிகளின் வழியே, உலகத்தை உங்களின் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. ஆனால், அதுவே உங்களை சக மனிதர்களிடம் இருந்து பல மைல் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றுவிட்டதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தூண்டப்படும் விளம்பரங்கள், பெருகி வரும் நுகர்வு கலாச்சாரம், பணப்புழக்கம் ஆகியவற்றால் ஒவ்வொருவர் வீட்டிலும் இன்றைக்கு குறைந்தபட்சம் நான்கு  மொபைல் ஸ்மார்ட் போன்களாவது இருக்கின்றன. இதன் விளைவு, குடும்ப உறுப்பினர்களேகூட வாட்ஸ்அப் வழியே உரையாடிக் கொள்ளும் அவலத்தை உருவாக்க...
இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

இது ஆண்கள் சமாச்சாரம் மட்டுமில்ல! ஆனால் வயது வந்தோர்க்கு மட்டுமானது!!

மருத்துவம், முக்கிய செய்திகள்
இந்தியா போன்ற புராதன நம்பிக்கைகளில் ஊறிப்போன நாடுகளில் காதல், திருமணம், குழந்தைப்பேறு, கலவி குறித்த சங்கதிகள் யாவுமே அளவுக்கு அதிகமாகவே புனிதமாக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புனிமாக்கும் போக்கு, ஒருவேளை சமூகத்தில் குற்றங்கள் பெருகி விடும் என்ற அச்சத்தினாலோ அல்லது அறியாமையினலோகூட இருக்கலாம். சொல்லப்போனால் அத்தகைய உணர்வுகள் புனிதங்களே அல்ல.   ஆனால் ஆண், பெண் உடலியலில் ஏற்படும் இயல்பான மாற்றங்களை பதின்பருவ சிறுவர், சிறுமிகளுக்கு கற்பிக்காமலே வந்திருப்பது ஆகப்பெரும் சமூகக் குற்றமாகத்தான் பார்க்கிறேன். அப்படியான ஒரு சங்கதி பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.   நடிகர் தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை'யில், ஒரு காட்சியில் 'தலைவாசல்' விஜய், ''இந்த பசங்க பாத்ரூமுக்குள் போய் அப்படி ரொம்ப நேரமா என்னதான் பண்ணுவானுங்களோ...?'' என்று சலிப்புடன் கூறுவார். எல்லோருமே பதின்பருவக...