Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!

தர்மபுரி மாவட்டம்,
பாலக்கோடு அருகே பள்ளி
வகுப்பறையில் சிறுமிகளிடம்
பாலியல் அத்துமீறலில்
ஈடுபட்டதாக வந்த
புகாரின்பேரில் கணித
ஆசிரியர் பணியிடைநீக்கம்
செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு அருகே
வெள்ளி சந்தையில்
அரசு நடுநிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது.
1 முதல் 8ம் வகுப்பு வரை
செயல்படும் இப்பள்ளியில்
90 மாணவ, மாணவிகள்
படித்து வருகின்றனர்.
பிரகாஷ்குமார் (54) என்பவர்,
இப்பள்ளியில் கணித
ஆசிரியராக பணியாற்றி
வருகிறார். கடந்த
பத்து நாள்களுக்கு முன்பு,
ஆசிரியர் பிரகாஷ்குமார்,
6ம் வகுப்பு படித்து வரும்
இரண்டு மாணவிகளிடம்
வகுப்பறையில் வைத்து
பாலியல் அத்துமீறலில்
ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட
சிறுமிகள் இதுபற்றி
பெற்றோர்களிடம் அன்றே
கூறியிருக்கின்றனர்.
அதன்பேரில், பெற்றோர்கள்
இதுபற்றி பள்ளித்தலைமை
ஆசிரியர் சிவகாமசுந்தரியை
நேரில் சந்தித்துப் புகார்
அளித்துள்ளனர். அவரும்,
உடனடியாக வட்டாரக் கல்வி
அலுவலர் உமாராணியிடம்
பிரகாஷ்குமார் மீதான புகார்
குறித்து அலைபேசி வாயிலாக
தகவலைத் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகும் ஆசிரியர்
பிரகாஷ்குமார் மீது எந்த
நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட
சிறுமிகள் அந்த ஆசிரியருக்கு
பயந்து கொண்டு பள்ளிக்குச்
செல்லாமல் வீட்டில் இருந்து
வந்துள்ளனர். இந்த நிலையில்,
சிறுமிகளின் பெற்றோர்,
உறவினர்கள் ஐம்பதுக்கும்
மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை
(நவ. 29) காலையில்
பள்ளிக்கூடத்தை திடீரென்று
முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட
ஆசிரியரை கைது
செய்யக்கோரியும்
முழக்கமிட்டனர்.

காவல்துறை மற்றும்
பள்ளிக்கல்வித்துறை
அதிகாரிகளின் சமரசப்
பேச்சுவார்த்தையை அடுத்து,
அவர்கள் போராட்டத்தைக்
கைவிட்டனர். இதையடுத்து
ஆசிரியர் பிரகாஷ்குமாரை
உடனடியாக பணியிடை நீக்கம்
செய்து தர்மபுரி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்
முத்துக்கிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மேலும், புகார் வந்த பிறகும்
அவர் மீது துறை ரீதியான
நடவடிக்கை எடுக்காமல்
அலட்சியமாக செயல்பட்ட
கல்வி அலுவலர்
உமாராணியிடம் விளக்கம்
கேட்டு குற்றச்சாட்டு
குறிப்பாணையும் அனுப்பினார்.

இந்த சம்பவம்
தர்மபுரி மாவட்ட
பள்ளிக்கல்வித்துறை
வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.