Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

பிளஸ்2 முடித்த,
விளையாட்டுத்துறையில்
சிறந்த நிலையில்
உள்ளவர்களுக்கு தமிழ்நாடு
அஞ்சல் துறையில்
வேலைவாய்ப்பு
அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்துறையில் காலியாக உள்ள
Multi tasking staff,
Postman, Postal assistant /
Sorting assistant
பணியிடங்களை நிரப்ப
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. மொத்தம்
231 பணியிடங்கள்
காலியாக உள்ளன.
இதற்கான அறிவிப்பு
கடந்த 25.11.2019ம்
தேதியன்று வெளியிடப்பட்டது.
விண்ணப்பிக்க,
31.12.2019ம் தேதி
கடைசி நாள்.

 

முற்றிலும் தகுதி
(meritorious) அடிப்படையில்
மட்டுமே இப்பணியிடங்கள்
நிரப்பப்படும். பணிக்கு
தேர்ந்தெடுக்கப்படுவோர்
தமிழ்நாட்டில் எங்கு
வேண்டுமானாலும்
பணியமர்த்தப்படுவார்கள்.

 

காலியிடம் மற்றும் ஊதிய விவரம்:

 

போஸ்டல் அசிஸ்டன்ட்: 89
சம்பளம்: ரூ.25500 – ரூ.81100

போஸ்ட்மேன்: 65
சம்பளம்: ரூ.21700 – 69100

மல்டி டாஸ்கிங் ஸ்டாப்: 77
சம்பளம்: ரூ.18000 – 56900

மொத்த காலியிடங்கள்: 231

 

கல்வித்தகுதி:

 

10+2 / பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பற்றிய முழு விவரங்களும் உரிய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

வயது தகுதி:

 

போஸ்ட்மேன், போஸ்டல் அசிஸ்டன்ட் / சார்டிங் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18. அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

எம்டிஎஸ் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

வயது தளர்வு விவரங்களை உரிய இணையதளத்தில் பார்க்கலாம்.

 

எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு / திறன் தேர்வு முறையில் இப்பணியிடங்களுக்கு ஆளெடுப்பு நடைபெறும்.

 

விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அதாவது, சர்வதேச அளவில் பதங்கங்கள் வென்ற வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பிறகு, தேசிய அளவில், பல்கலைகளுக்கு இடையில், பள்ளிகள் அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

ஆப்லைன் (Offline)
முறையில் விண்ணப்பிக்க
வேண்டும்.

 

முகவரி:

 

The Assistant Director (Recruitment),
O/o the Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai – 600002.

 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100

 

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

– நாடோடி