இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!
முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு ...