Saturday, February 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Lok Sabha

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

மக்களவை தேர்தல்: 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

அரசியல், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாடு முழுவதும் பதினெட்டாவது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது. முதல்கட்டமாக தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. 26 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு சுற்றிலும் திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுத...
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவு; எடப்பாடியில் அபாரம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உள்பட மொத்த...
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்...
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்கான அ...
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம் போ...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப...
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற...
மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு...
ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை...
பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

அரசியல், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் படிவங்கள் காகித தட்டுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வலுவாக காலூன்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயித்து, 'மிஸ்டு கால்' திட்டத்தை அறிவித்தது. அதாவது, மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர்கள் பாஜகவின் உறுப்பினராக வீடு தேடி வந்து சேர்த்துக் கொள்ளப்ப டுவர். இதற்காக அச்சிடப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திமுகவில் இருந்த நடிகர் நெப்போலியன் கூட, 'மிஸ்டு கால்' கொடுத்த பின்னர்தான்...