எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடிய விவசாயிகள் சட்ட விரோத கும்பலா? 4 பிரிவுகளில் புதிய வழக்கு!
எட்டுவழிச்சாலை என்ற பெயரில்
விளைநிலங்களையும், மலை
வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு
காவு கொடுக்கும் அரசின்
சதியை எதிர்த்து, சொந்த
மண்ணுக்காகப் போராடி வரும்
அப்பாவி விவசாயிகள் மீது
எடப்பாடி பழனிசாமியின் அரசு,
சட்ட விரோத கும்பலைச்
சேர்ந்தவர்களாக சித்தரித்து
நான்கு பிரிவுகளில் வழக்குப்
போட்டிருப்பது அவர்களிடையே
கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறது.
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை கையில் எடுத்தது முதல் ஆளும் எடப்பாடி அரசுக்கு ஏழரை தொடங்கிவிட்டது. அப்போதுமுதல் தூக்கத்தை தொலைத்து நிற்கும் இந்த அரசு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி போலீசாரின் அடக்குமுறைகளைக் கையாண்டு நிலங்களை அளந்து முட்டுக்கல் போட்டது.
இந்த திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐ...