Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கல்விக்கொள்கை வகுக்கும் உரிமை மாநில அரசுகளின் வசம் கொண்டு வந்தால், நீட் தேர்வு பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துவிடும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற சமகால பிரச்னைகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது அரசியல் விமர்சன கருத்து சொல்லும் தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியின்போது, 'நான் இனி அரசியல்வாதிகளை வெளியில் இருந்து விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,' என்றுகூறி, அரசியல் களத்தில் இறங்கி விட்டதை வெளிப்படையாகவே சொன்னார். அந்த மேடையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். திங்கள்¢ முதல் வெள்ளிக்கிழமை வரை களைகட்டாத பிக்பாஸ் ந
”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

”தமிழகத்தில் ஆயுத புரட்சி வெடிக்கும்!” – விவேக் மாவோயிஸ்ட்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் ஆயுதப் புரட்சி வெடிப்பதற்கான சூழல் உருவாகும் என்று 'இந்திய கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட்' கட்சியின் முக்கிய தளபதியான விவேக் கூறினார்.   மாவோயிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் சிபிஐ - மாவோயிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான விவேக் என்கிற விவேக் மாவோயிஸ்ட், தான் எழுதி வரும் நூல் ஒன்றின் மொழிபெயர்ப்பு பணிகளுக்காக கடந்த மாதம் (ஆகஸ்ட்) சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். தகவல் அறிந்து நாமும் அவர் தங்கியிருந்த, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ராஜலிங்கத்தின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.   அது ஒரு மழை நாள் இரவு. கியூ பிராஞ்ச் மற்றும் உள்ளூர் காவல்துறை என பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சாதாரண உடையில், அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர். நாம் சென்றதையும் மோப்பம் பிடித்துவிட்ட உளவுத்த
சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியை சபரிமாலா அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள அதேநேரத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக தொடர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வழக்கமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து போராடுவார்கள். இப்போது ஆளுங்கட்சி உள்ள நிலையில் எப்போது போராடினாலும், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும், அதன்மூலம் சில பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற உள்ளார்ந்த கணக்கீடுகளும் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கும் இருக்கலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோவின் பிரதான கோரிக்கை, பணப்பலன்களை பெறுவதே. குறிப்பாக, இப்போது அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ
சேலம் மாணவி  வளர்மதி விடுதலை

சேலம் மாணவி வளர்மதி விடுதலை

அரசியல், கோயம்பத்தூர், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குண்டர் தடுப்பு சட்டத்தில், கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேலம் மாணவி வளர்மதி இன்று (செப். 7) மாலை பிணையில் விடுதைல செய்யப்பட்டார். சேலம் பள்ளிக்கூடத்தானூரைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி. பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி திட்டங்களைக் கண்டித்து மக்களிடம் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகில், கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாகன மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அவர் அரசுக்கு எதிராக மாணவர்களை போராடத் தூண்டுவதாகக் கூறி, சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்த சில நாள்களில், நக்சல், மாவோயிஸ்ட
நீட் தேர்வு:  பலன் அடைந்தவர்கள் யார்?

நீட் தேர்வு: பலன் அடைந்தவர்கள் யார்?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வினால் பலன் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், முற்பட்ட வகுப்பினர் பெருமளவிலான எம்பிபிஎஸ் இடங்களை கபளீகரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நீட் எனப்படும் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், ஜெயலலிதாவுக்குப் பிறகு வலுவான அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், இந்தாண்டு தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடத்தி முடித்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிரான உக்கிரம் மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் பரவலாக வலுத்து வருகிறது. எம்பிபிஎஸ் மாணவ
இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கர்நாடகாவில் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில், கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகி கொல்லப்பட்டார். நேற்று (செப். 5) லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ். இருவருமே இடதுசாரி சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள்; எழுதக்கூடியவர்கள். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். கவுரி லங்கேஷின் படுகொலைக்கு காரணமென காவி கும்பல்களின் மீதான சந்தேகம் இயல்பாகவே வலுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (International Federation for Journalists) சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு, இந்த சம்மேளனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 122
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ
முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’  கோல்மால்!

முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’ கோல்மால்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கு பாடம் நடத்தியதாக முன்அனுபவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியின் முதல்வரே இவ்வாறு தவறான தகவல்களை தந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதிலும், இணைவு கல்லூரிகளில் புதிய துறைகள் தொடங்கப்படுவதிலும் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே உள்ளன. இப்பல்கலையின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்ப
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சேலத்தை அடுத்த பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் வளர்மதி. சேலம் பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி ஆகிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அருகே இத்திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், அரசுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும், ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்களை வெளியி
உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. இந்நிலையில், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக