Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

திண்ணை: சொல்வதெல்லாம் பொய்!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தமிழ்நாட்டுல மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடு ஏறிட்டே போறது. அதைவிட இப்பவே கத்திரி வெயிலாட்டம் கொளுத்துது. வெளில தல காட்ட முடியலப்பா...'' என்றபடியே, நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   வெயிலுக்கு இதமாக மய்ய அரைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கின வெள்ளரி துண்டுகள் கலந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார் நக்கலார். ''தேர்தல் சம்பந்தமா லேட்டஸ்ட் சேதி என்ன இருக்கு? கருத்துக்கணிப்பு கிணிப்பு ஏதாச்சும் இருக்கா?'' என்றார்.   ''இப்பலாம் எங்க உருப்படியான கருத்துக்கணிப்பு இருக்கு... எல்லாம் திணிப்புதான். அவங்கவங்க அரிப்புக்கு தகுந்தமாதிரி சொறிஞ்சு விடறதுக்கும் இன்றைக்கு நிறைய ஊடகங்கள், தரகர்கள் வந்துட்டாங்க. அப்படி யாருக்கிட்டதான் கருத்துக்கணிப்பு நடத்துவாங்களோ... கருத்து சொன்ன ஒரு பயலும் பேஸ்புக்லயோ, டிவிட்டர்லயோ, வாட்ஸ்அப்பு...
எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

எட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்!

அரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரசுகள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்...
சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.   தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா.... இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா... அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா ...
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர...
சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

சேலம் தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா எடப்பாடி?; குஸ்தி போடும் திமுக – அமமுக!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதியை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தக்க வைத்துக்கொள்வதில் எடப்பாடியின் அதிமுகவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து வெளியிட்டு, அரசியல் களத்தை சூடேற்றி இருக்கின்றன. முதல்வர் மாவட்டம் என்பதால், மற்ற தொகுதிகளைக் காட்டிலும் சேலம் மக்களவை தொகுதி அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.   மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதாலும் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் களம் இறங்குகிறார். அதிமுக சார்பில், கே.ஆர்.எஸ். ...
கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.   தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,...
திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''ஒண்ணு, முட்டா பீஸூ... இன்னொன்னு அடிமுட்டா பீஸூ.... ஆனாலும் சில நேரத்துல ரெண்டு பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா...'' என்று பேசிக்கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   ''அட அந்த ரெண்டு பேரும் யாருனு சொன்னாத்தானே எங்களுக்கெல்லாம் விளங்கும்'' என்றார் நக்கல் நல்லசாமி.   அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன் வந்து அரட்டையில் ஐக்கியமானார் நம்ம ஞானவெட்டியார். ''போன சட்டமன்ற தேர்தலப்பவே முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுல சூரியக்கட்சி படாதபாடு பட்டுச்சு. அவங்க கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில இருந்து வெளியேறி, மநகூவுல சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும் முரசு கட்சிய கூட்டணிக்குள்ள இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார் சொதப்பிட்டாரேனு சூரியக்கட்சிக்காரய்ங்களே புலம்புறாங்கப்பா.   மாம்பழம்தான் கனியாம போ...
திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

திண்ணை: அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்தது எப்படி?

அரசியல், திண்ணை, முக்கிய செய்திகள்
''உஷ் அப்பாடா....இப்பவே இப்படி சுட்டெரிக்குதே... இன்னும் அக்னி நட்சத்திர சீசன்லலாம் நம்மாள பகல்ல வெளியே தலைக்காட்டக்கூட முடியாது போலருக்கு..." அடர்த்தியான தலைமுடி ஊடாக வழிந்த வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர். ''வெயில் மட்டுமா...? அரசியல் களமும் சூடுபிடிச்சிடுச்சே. இப்படியே கொளுத்துனா கத்திரி வெயில்ல மூளை தெறிச்சி வெளியே விழுந்துடும் போல. ஆனாலும் அதெல்லாம் மூளை இருக்கறவன் பட வேண்டிய கவல. எனக்கெதுக்கு...'' என தன்னைத்தானே எள்ளல் செய்து கொண்டார் நக்கல் நல்லசாமி.   ''சரி.... சரி... சட்டுபுட்டுனு வந்த தகவல சொல்லிட்டுப் போயிடறேன்... இன்னும் அரசியல் சேதி நிறைய எழுத வேண்டியிருக்கு. அதிமுக, திமுகவோட எந்தக் காலத்துலயும் கூட்டு வைக்க மாட்டோம். வேணும்னா பத்திரம்கூட எழுதித் தற்ரோம்னு சின்ன மாங்கா sorry... சின்ன அய்யா சொன்னாருல்ல...?'' ''ஆம...
”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

அரசியல், குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீதான நில அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது. 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அலைக்கழித்ததில் இறந்தே போனார். இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும் இப்போது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.   ''தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிற...
திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

திண்ணை: பகுத்தறிவு பல்கலை பதிவாளர் பதவிக்கு ஏலம்; அமைச்சர் கறார்!

அரசியல், கடலூர், சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''முன்னாடிலாம் வீட்டு வீட்டுக்கு திண்ணைய கட்டி வெச்சிருப்பாங்க. பாதசாரிங்க யாராவது உட்கார்ந்து இளைப்பாறிட்டு போறதுக்கு வசதியா இருக்கும். இப்போலாம் வீடுங்கதான் பெருசு பெருசா இருக்கே தவிர திண்ணையதான் காணோம். தமிழனுங்க மனசும் சின்னதாப் போச்சுது'' என்றபடியே, சலிப்புடன் நக்கல் நல்லசாமியின் வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''எங்கே நம்ம ஞானவெட்டியாரையும், பொய்யாமொழியாரையும் நாலஞ்சு நாளா ஆளையே காணோமே?'' என்றார் நக்கல் நல்லசாமி. ''ஓ...அவங்களா... ஏதோ வேலையா பண்ருட்டி பக்கம் போயிருக்கறதா சொன்னாங்க''   ''இப்போது ஏதும் பலாப்பழம் சீசன் இல்லையே?'' ''யோவ்... இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்ற பேனாக்காரர், அவங்க எதுக்கு பண்ருட்டிக்கு போனாங்கனு நமக்கு தெரியலப்பா. ஆனா, அங்க இருந்தபடியே நமக்கு செல்போன்ல ஒரு சேதி சொல்லியிருக்காங்க'...