Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ...
எட்டு வழிச்சாலையை போட விடமாட்டோம்!; சிறைவாயிலில் சீமான் மீண்டும் ஆவேசம்

எட்டு வழிச்சாலையை போட விடமாட்டோம்!; சிறைவாயிலில் சீமான் மீண்டும் ஆவேசம்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு கல்லை வேண்டுமானால் நடலாம். ஆனால் ஒருபோதும் சாலையைப் போட விடமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆவேசமாக கூறினார்.     சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே கூமாங்காடு கிராமத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை கடந்த 18ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் நேரில் சந்தித்து கருத்து கேட்டார்.   இதையறிந்த மல்லூர் காவல்துறையினர், ஏற்கனவே ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமினில் இருக்கும்போது இதுபோல் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவரை கைது செய்தனர். அவருடன், அக்கட்சி நிர்வாகிகள் 9 பேரையும் கைது செய்தனர். அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.   இந்த வழக்கில் நேற்று மாலை அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து இன்று (ஜூலை 20, 2018) கால...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.     எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:   எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?     முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைக...
சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதோடு, மக்களிடம் கலகத்தைத் தூண்டியதாக ஏற்கனவே ஒரு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.   அந்த வழக்கில் தினமும் காலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது.   இந்நிலையில், நேற்று சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே உள்ள கூமாங்காடு கிராமத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து சீமான் கருத்து கேட்டார். இது நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய செயல் எனக்கூறி, மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் மட்டுமின்றி அவருடைய கட்சியைச் சேர்ந்த யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வம், சிவக்குமார், தமிழரசன், மண...
எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.     டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண...
மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

மேட்டூர் அணை திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட எடப்பாடி!

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கரூர், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், முக்கிய செய்திகள், ராமநாதபுரம்
  மேட்டூர் அணை திறப்பு விழாவில், காவிரிக்காக இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் புரட்சித்தலைவி அம்மா என ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரைப்பற்றி குறிப்பிடும்போது நா தழுதழுக்க...கண்களில் நீர் ததும்ப பேசினார்.     கடந்த பத்து நாள்களுக்கு மேலாக கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து பாதுகாப்புக்கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. கர்நாடகாவில் இருந்து நாளுக்கு நாள் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தமி-ழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ப...
”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.   சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நி...
”டிடிவி தினகரன் மக்களின் முதல்வரா?”; ஜெயலலிதா விசுவாசிகள் அப்செட்!

”டிடிவி தினகரன் மக்களின் முதல்வரா?”; ஜெயலலிதா விசுவாசிகள் அப்செட்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்திற்கு வந்திருந்த டிடிவி தினகரனை வரவேற்று சாலையெங்கும் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு வரவேற்பு வாசகங்கள் இருந்ததைக் கண்டு தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். சேலத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழா மற்றும் கட்சிக் கொடியேற்றும் விழாக்களில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் இன்று சேலம் (ஜூலை 7, 2018) வந்திருந்தார். குரங்குசாவடி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவர் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக தலைமைக் கழக செயலாளருமான எஸ்.கே.செல்வம் வசிக்கும் பூலாவரி அருகே உள்ள ஒரு மண்டபத்தில், திருமண விழா நடந்தது. இதனால் ஹோட்டல் அருகிலும், பிறகு கொண்டலாம்பட்டியில் இருந்து எஸ்.கே. செல்வம் வீடு ...
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர...
கற்பனையான ராமர் பாலத்தை காப்பாற்ற துடித்த பாஜக விவசாயத்தை அழிக்க துடிப்பது ஏன்?: சுப்புலட்சுமி ஜெகதீசன் காட்டம்

கற்பனையான ராமர் பாலத்தை காப்பாற்ற துடித்த பாஜக விவசாயத்தை அழிக்க துடிப்பது ஏன்?: சுப்புலட்சுமி ஜெகதீசன் காட்டம்

அரசியல், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கற்பனையான ராமர் பாலத்தைக் காட்டி சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கிய பாஜக, விவசாய நிலத்தை அழித்து எட்டு வழிச்சாலை போடலாமா? என திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.   எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக போலீசார் விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரியும், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தியும் சேலத்தில் திமுக சார்பில் இன்று (ஜூன் 23, 2018) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிலர் கறவை...