Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கட்சியின் தலைமைப் பதவிக்கு கொல்லைப்புறமாக வந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் இன்று (செப். 25, 2018) நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.   கண்டன பொதுக்கூட்டம்   திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:   ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக...
வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (செப்டம்பர் 11, 2018) கூறினார்.   முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். வழக்கமாக வார இறுதி நாளாக பார்த்து நிகழ்ச்சிகளை திட்டமிட்டு சேலத்திற்கு வருகை தரும் முதல்வர், இந்தமுறை வாரத்தின் துவக்கத்திலேயே வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசுதான் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக, எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்திட முடியாது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடந்தது என்பதை வைத்து மட்டுமே அவரை குற்றவாளி என்று சொல்லி விட முட...
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வாக...
தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன், கட்சிக்காக ஓடியாடி நிதி திரட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் யோசனைகூற, அதே அம்பை தயாநிதி மீதே ஏவிய துரைமுருகனால் பொதுக்குழுவில் பலத்த சிரிப்பலை எழுந்தது.   சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக  தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னாள் மத்திய அமைச்சரும், சன் குழும இயக்குநர்களுள் ஒருவருமான தயாநிதி மாறன் பேசுகையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துச் சொன்னார். பிறகு, பொருளாளர் பதவியேற்றுள்ள துரைமுருகன், மு.க.ஸ்டாலின்போல ஓடியாடி கட்சிக்கு நிதி குவிக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். இதையடுத்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், அவர் தி...
ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
  திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?' என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ம...
தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!

தமிழக முதல்வர் கிரிஜாவை மதிக்கிறேன்!; எஸ்.வி. சேகருக்கு காமெடி நடிகர் கிண்டல் ட்வீட்!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நடிகர் சங்க பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகருக்கு, காமெடி நடிகர் கருணாகரன் கிண்டலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளது கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது.   முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16.8.2018ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 17ம் நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்பட்டது. தமிழக அரசும் ஒரு வார காலத்திற்கு துக்கம் அனுசரிக்கும் என்று அறிவித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், (ஆகஸ்ட் 19) நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவர் அரசியல் தலைவர் என்பது மட்டுமின்றி, ...
இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

அரசியல், இந்தியா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவரான விவேக் மாவோயிஸ்ட், கடந்த ஜூன் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். எப்போதும் காவல்துறை உளவுப்பிரிவின் நெருக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் அவரை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: பிரதமர் மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளி வந்தனவே?   விவேக்: பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டது. இது எவ்வளவு பெரிய கேலி கூத்து என்றால், அப்படி கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் நபர், ஜேஎன்யூ பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தவர்.   சிறையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வத...
கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

கருணாநிதி மரணம்… தலைவராகும் தளபதி… எதையும் இழக்கத் தயாரான ஸ்டாலின்! கண்ணீர்மயமான திமுக செயற்குழு!!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்த எட்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 14, 2018), அக்கட்சி செயற்குழுவின் அவசரக்கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. நேற்றைய தினம் மு.க. அழகிரி, ''கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள். முக்கிய தலைவர்கள் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருக்கின்றனர்,'' என்று சரவெடி கொளுத்திப் போட்டார். இதனால் இன்றைய அவசர செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறக்கும் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவியது. 325 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்ட அரங்கம், ஆரம்பத்தில் இருந்தே இறுக்கமாக காணப்பட்டது. எவர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் தென்படவில்லை.   மேடையின் பின்னணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் ஸ்டாலின் முகமும் அச்சிடப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பே ...
கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதி மூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி, எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர் கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள். கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....   * கடவுள் இருக்கிறாரா? இல்லையா?   கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ...
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர...