Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா...
வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!;  ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!; ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கியிருந்த கடனில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 558 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஓர் ஏழை விவசாயி வாங்கியிருந்த டிராக்டர் கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்பும் வங்கி நிர்வாகங்கள், சர்வ வல்லமை படைத்த பெரு முதலாளிகளிடம் கைக்கட்டி நின்று சேவகம் செய்கிறது. பொய்த்துப் போன வானத்தால், கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை அடித்தே கொல்கின்றனர் வங்கியாளர்களும், காவல்துறையினரும். கடனை பெற்றுவிட்டு, அதையும் திருப்பிச் செலுத்தாமல் போக்குக் காட்டிவரும் பெரும் பணமுதலைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கிறது இந்திய அரசு. கல்விக்கடன் கேட்டாலோ, முத்ரா திட்டத்தில் சில லட்சங்களை தொழில் தொடங்க கடன் கேட்டுச் செல்லும் சாமானியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வதைக்கும் வங்கிய...
பொய் செய்தி விவகாரம்: பணிந்தார்  நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

பொய் செய்தி விவகாரம்: பணிந்தார் நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பொய் செய்திகள் வெளியிடும் ஊடகத்தினரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, அந்த உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தார். நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 2, 2018) திடீரென்று ஓர் உத்தரவை பிறப்பித்தார். போலி செய்திகள் வழங்கிய குற்றம் முதல்முறையாக நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் தேசிய அங்கீகாரம் (National Accreditation) 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட...
வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அந்தப்பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கணித பாடத்திற்கு மறுதேர்வு கிடையாது என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இதில் பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் ஆகிய பாடத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியானதாக புகார்கள் எழுந்தன. சிபிஎஸ்ஐ நிர்வாகத்தைக் கண்டித்து டெல்லியில் பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடந்தது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீட்டையும் பலர் முற்றுகையிட்டு போராடினர். இதையடுத்து, பிளஸ்2 பொருளியல் மற்றும் பத்த...
காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி...
பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்...
2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வ...
”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கடந்த சில நாள்களாக பழமொழியை மாற்றிப் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து வந்த ட்விட்டர் புலிகள், 'எடியூரப்பா அரசுதான் ஊழலில் நம்பர்-1' என்று பகிரங்கமாக தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் உளறல்களை இந்தியாவுக்கே இன்று பந்தி வைத்துவிட்டனர். கர்நாடகா மாநிலத்தில், வரும் மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பாஜக தொழில்நுட்பப் பிரிவுத்தலைவர் அமித் மால்வியா, ட்விட்டரில் தேர்தல் தேதியை வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் பாஜக தேசிய...
ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்;  செவிகளை மூடிக்கொண்ட  அரசாங்கம்!!

ஸ்டெர்லைட் ஆலையை மூடு அல்லது கருணைக் கொலை செய்துவிடு!; கொந்தளிக்கும் மக்கள்; செவிகளை மூடிக்கொண்ட அரசாங்கம்!!

இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி, முக்கிய செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளுக்குநாள் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஆனால், நடுவண் மற்றும் மாநில அரசுகள் இவ்விவகாரத்தில், செவிகளையும், கண்களையும் மூடிக்கொண்டு பாராமுகமாக இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இறக்குமதியை நோக்கி கவனத்தை திருப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவோ, இந்த மண்ணில் மிச்சமிருக்கும் செல்வங்களையும் சுரண்டுவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, தனிநபர்களின் லாப வெறிக்காக கண்மூடித்தனமாக சுரண்டலை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் அண்மைய தேர்தல் கால முழக்கம் என்பது, வளர்ச்சி அரசியல் பற்றியதுதான். ஆனால், யாருக்கான வளர்ச்சி என்பதுதானே கேள்வி?. மக்கள் நஞ்சருந்தி மாண்டாலும் பரவாயில்லை; தனிப்பெரும் முதலாளிகளுக்கு ஜலதோஷம் பிடித்து விடாமல் காத்து வருகிறது இந்திய அரசு. அது ப...
ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொது நிகழ்ச்சியில் ஒரே ஒரு பழமொழியைக் கூறியதன் மூலம் இன்று (மார்ச் 23, 2018) இந்திய அளவில் ட்விட்டர் சமூக ஊடகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.     பொதுக்கூட்டமோ, பொதுநிகழ்ச்சிகளோ அரசியல்வாதிகள் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசுவது என்பது உலகளவில் நடைமுறையில் இருந்து வருவதுதான். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி மேடைகளில் பேசும்போது எழுதி வைத்துக்கொண்டு பேசுவதில்லை. எத்தனை ஆண்டுகால வரலாறாக இருந்தாலும், அவர் மூளைக் கிடங்கில் இருந்து துல்லியமான தகவல்கள் சுரந்து கொண்டே இருக்கும்.     கருணாநிதிக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையின்றி அவர் மேடையேறுவதே இல்லை. ஆனால் ஒரு பிரபலத்தின் வாரிசாக இருப்பதில் நிறையவே சங்கடங்கள் நிறைந்தது. பெற்றோர் பயணித்த அதே ...