Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பு நீக்கத்தின்போது பிரமதர் நரேந்திர மோடி சொன்ன ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு ஆகிய அனைத்து நோக்கங்களும் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நடுவண் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதிய 'பணமதிப்பு நீக்கமும் கருப்புப் பொருளாதாரமும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் டெல்லியில் நடந்தது. பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நடுவண் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தன்னை, 'ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது: நடுவண் அரசின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு கொள்கை வகுப்பாளரை மட்டுமே இந்த அரசு கொண...
ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று,...
சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!;  மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!; மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
இன்று (மார்ச் 15, 2018) நடந்த சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு வினாத்தாள் நேற்று மாலையில் முன்கூட்டியே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதால் மாணவர்களும், பெற்றோர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று கணக்குப்பதிவியல் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாலையிலேயே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதாகக் கூறப்படுகிறது. வினாத்தாளின் சில பகுதிகள் மட்டும் வெளியாகி இருந்தன. பொருத்துக விடையளிக்கும் வினாவிற்கான விடைகள் தரப்பட்டிருந்தன. ஒருவேளை, விஷமிகள் யாராவது போலியாக அவ்வாறு பரப்பியிருக்கலாம் என மாணவர்கள் கருதினர். எனினும், தேர்வுக்காக தயாராகி வருவதால் வாட்ஸ் அப்-ல் ...
ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆதார் எண் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுவண் பாஜக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதார் அட்டை விநியோகம் மற்றும் ஆதார் எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்றது. வங்கிக் கணக்கு, மொபைல் போன், வருமான வரி, பான் அட்டை மற்றும் சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவது வரை ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக நடப்பு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான சேவைகளைப் பெறவும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக காலக்கெடுவை நீட...
இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்;  ரயில்வே திட்டம்

இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்; ரயில்வே திட்டம்

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த ஒருவர், தவிர்க்க இயலாத நிலையில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அந்த டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வரும் ரயில்வே, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தி வருகிறது. ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது என்பது இதுவரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அதை நிர்வாகமே அனுமதிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இவ்வாறு மாற்றித்தரப்படும் டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரே ஒப்புதல் வழங்கலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதலாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டபடி பயணம் செய்ய இயலாமல்,...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத...
கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
தீராத, மீள முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 9, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் மரணத்தைத் தழுவ உரிமை உண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது. காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ''நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வாய்ப்பு இல்லாத நிலையில், மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவர்கள் உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, மரணத்தைத் தழுவ கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று கோரியிருந்தது.   பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கருணை கொலை ...
மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்ப...
திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக 'லால் சலாம்' முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து 'பாரத் மாதா கி ஜே'வும், 'வந்தே மாதரம்' முழக்கமும் எதிரொலிக்கின்றன. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது. குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார்...
திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக;  நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

திரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் நீடித்து வந்த கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவுரை எழுதிவிட்டு, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதன்படி, திரிபுராவில் கடந்த பிப்ரவரி 18ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் தலா 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 3, 2018) எண்ணப்பட்டன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. திரி...