Friday, April 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

ஜூலை 20 முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்!: “சுங்க கட்டணத்தை ரத்து செய்”

ஜூலை 20 முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்!: “சுங்க கட்டணத்தை ரத்து செய்”

இந்தியா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 20ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா இன்று (ஜூன் 29, 2018) கூறினார். தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:   நாடு முழுவதும் சுங்கக் கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதேபோல, லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை உடனடியாக குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கனவே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ...
”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

இந்தியா, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-5-2018ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார்.   தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இ...
நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மாபெரும் ஊழல்!: வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு

அரசியல், இந்தியா, கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது: மனித உரிமை மீறல்: நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதுகுறித்து தே...
இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இந்தியா, கல்வி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சோகத்துடன் கூறினர். பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் போனால், இத்தேர்வை எதிர்கொள்வதே சவாலானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் போட்டித்தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மதியம் 1 மணி வரை நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதேபோல, வினாத்தாள் தாமதாக வந்தது, மொழி மாறி வந்த வினாத்தாள், பதிவெண் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. சேலம் மெய்யனூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியும் நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மையத...
கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி, காட்டுப்பகுதிக்குள் சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவளுடைய கை, கால் எலும்புகள் முறிக...
#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டங்கள், ஆளும்தரப்பு மற்றும் பாஜக வட்டாரத்தில் கடும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #ஓடிப்போமோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மோடி மீது எழுந்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போக்குக் காட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. இதற்கான 6 வார கால அவகாசம் முடிவுற்ற கடைசி நாளில், இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்திய அரசு. எதிர்வரும் கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் திட்டமிட்ட...
காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

காவிரி விவகாரம்: கர்நாடகா பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு நடுவண் அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பாஜகவை தவிர ஆளும் அதிமுக கட்சி முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடையடைப்பு, முற்றுகை, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7ம் தேதி முதல் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருக்கும்போதும் சிலர் கருப்புக்கொடி காட்டியும், காலணிகளை மைதானத்திற்குள் வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னதாக, போட்டிக்குத் தடை விதிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலைய...
பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

பிளஸ்-2க்கு பிறகு என்ன படிக்கலாம்?: சி.ஏ. படித்தால் சிறப்பான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர் #1

இந்தியா, கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்குப் பிறகு பட்டமேற்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் பாடங்களைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்து இந்த தொடரில் பார்க்கலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நானும் நண்பர் ஒருவரும் சில மாதங்களுக்கு முன்பு, ஈழ அகதி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்குவது தொடர்பான தகவல் சேகரிப்புக்குச் சென்றிரு ந்த...
ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது. ...
தாயின் சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் மகன்; ஆம்புலன்ஸ் வராததால் அவதி

தாயின் சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் சுமக்கும் மகன்; ஆம்புலன்ஸ் வராததால் அவதி

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்தியாவில் எந்த ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் என்றாலும், சந்தேகமே இல்லாமல் அத்தகைய நிகழ்வுகள் நடக்கும் இடம் உத்தரபிரதேச மாநிலம்தான் என்று சட்டென சொல்லி விடலாம். மாட்டிறைச்சி உண்போரை தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் கொல்வது; பசுமாடுகளை ஏற்றிச்செல்லும்போது வாகன ஓட்டுநரை சாலையில் இழுத்து வந்து சாகடிப்பது; கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனைக்குச் சென்ற ஹிந்து பெண்ணை ஊர் முன்னிலையில் பெட்ரோல் ஊற்றி எரிப்பது; சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை உருட்டுக் கட்டையால் கதறக் கதற தாக்கிக் கொல்வது; ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பலியானது; ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க மறுத்ததால் தாயின் சடலத்தை துணியில் சுற்றி மகனே சுமந்து செல்வது... என உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்கும். இப்போதும் அதேபோன்ற ஒர...