சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை.
சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர்.
ஜனவரி 17ம் தேதி,
காட்டுப்பகுதிக்குள் சிறுமியின்
சடலம் கிடப்பது தெரியவந்தது.
அவளுடைய கை, கால்
எலும்புகள் முறிக்கப்பட்டு
இருந்தன. பிறப்பு உறுப்பு
சிதைக்கப்பட்டு இருந்தது.
உடைகள் கந்தலாகி சேரும்
சகதியுமாகக் கிடந்தாள்.
இந்த நிகழ்வு, பெரும்
பரபரப்பை ஏற்படுத்தவே,
ஜம்மு-காஷ்மீர் முதல்வர்
மெகபூபா முப்தி முறையான
விசாரணைக்கு உத்தரவிட்டார்.
முதல்கட்ட விசாரணையில்,
சிறுமி கொலை
செய்யப்பட்டிருப்பதும்,
கொல்லப்படுவதற்கு முன்
பல முறை பாலியல்
வன்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்பட்டு
இருப்பதும்
தெரிய வந்தது.
தீவிர விசாரணையில், இதன் பின்னணியில் உள்ளூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரின் மகன், கல்லூரி மாணவன் ஒருவன், காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன், காவல்துறை அதிகாரி ஒருவர் உள்பட முக்கியஸ்தர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கை கத்துவா மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஜல்லா நேரடியாக விசாரணை நடத்தினார். அவருக்கு பல இடங்களில் இருந்தும் வழக்கில் இருந்து வெளியேறிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் எதையும் அவர் காதில் வாங்காமல் விசாரணையில் தீவிரம் காட்டினார். அது தொடர்பாக ஒரு சிறு துப்பு கிடைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் தெரிவியுங்கள் என்று சக விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சடலம் கைப்பற்றப்பட்டபோது சிறுமியின் உடையில் கிடந்த சகதியை ஆய்வு செய்தபோது, அதில் ஒட்டியிருந்த சேரும் சகதியும் சடலம் கைப்பற்றப்பட்ட இடத்திற்கானது அல்ல என்பது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் பாஜக பிரமுகரான சாஞ்சி ராம் என்பவனைப் பிடித்து விசாரித்தபோது, அவனது கட்டுப்பாட்டில் உள்ள தேவிகாம்பாள் கோயிலில்தான் சிறுமி ஆசிஃபாவை 8 நாள்களாக அடைத்து வைத்து கூட்டாக வன்புணர்வு செய்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
நிகழ்விடத்தில் இருந்து
மொத்தம் 8 பேரின்
தலைமுடிகள்
கிடைத்திருக்கின்றன.
அதில் ஒன்று, சிறுமி
ஆசிஃபாவுடையது.
இது தொடர்பாக டிஎன்ஏ
பரிசோதனையும் நடந்து
வருகிறது. கோயிலுக்குள்
இருந்து எடுக்கப்பட்ட
மண்ணும், சிறுமியின்
உடையில் ஒட்டியிருந்த
மண்ணும் ஒத்துப்போவதும்
ஊர்ஜிதமானது.
அதன்பின் இந்த வழக்கில்
தொடர்புடையவர்கள்
எனக்கூறி இதுவரை
9 பேரை காவல்துறையினர்
கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை
விசாரிக்கச் சென்ற
தீபக் காஜூரியா என்ற
காவல்துறை அதிகாரியும்,
பாஜக பிரமுகரின் மகனுடன்
சேர்ந்து வன்புணர்வு
செய்துள்ளார். மேலும்
தடயங்களை மறைக்க
அவர்களிடம் இருந்து
1.50 லட்சம் கையூட்டு
பெற்றிருப்பதும்
தெரியவந்துள்ளது.
முக்கியக் குற்றவாளிகளில்
இரண்டு பேர் சிறுவர்கள் என்கிறது
காவல்துறை. அவர்கள்தான்,
சிறுமி ஆசிஃபா கூச்சல்
போட்டுவிடக் கூடாது
என்பதற்காக பாங்க்ரா என்ற
போதைப்பொருளையும்,
பிறகு குளோனாஜிபம் என்ற
மயக்க மருந்தையும்
கொடுத்துள்ளனர்.
எட்டு நாள்களாக தங்கள்
வெறியுணர்வு தீர தீர
கூட்டு வன்புணர்வு செய்த
அவர்கள், இறுதியாக சிறுமியை
கொல்லவும் முடிவு
செய்துள்ளனர். காவல்துறை
அதிகாரி தீபக் காஜூரியா,
முதலில் சிறுமியின் கழுத்தை
தன் தொடை மீது வைத்து
நெரித்துள்ளார்.
அதில் அவள் சாகாததால்
பிறகு கோயில் சுற்றுச்சுவர்
மீது தலையை
மோதியுள்ளனர்.
அப்போதும் திருப்தி
அடையாத அவர்கள்,
கழுத்தை கோழிக்குஞ்சின்
தலையைத் திருகுவதுபோல்
திருகி வெறியைத் தீர்த்துக்
கொண்டுள்ளனர். முன்னதாக,
வன்புணர்வின்போது சிறுமி
திமிறியதால் அவளுடைய
கை, கால் எலும்புகளையும்
முறித்துள்ளனர்.
எல்லாம் முடிந்த பிறகு,
அதன்பிறகு காட்டுப்பகுதிக்குள்
சடலத்தை வீசிவிட்டு அவரவர்
வீடுகளுக்குச் சென்றுவிட்டது
தெரியவந்துள்ளது.
கற்பனைக்கும் எட்டாத காட்டுமிராண்டி செயலில் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கில் குறித்த காலத்திற்கு முன்பாகவே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டார்.
ட்விட்டர் தளத்தில் இன்று #JusticeForAsifa என்று ஹேஷ்டேக் செய்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகைகள், சமூக செயற்பாட்டாளர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், பாஜக அரசின் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதைக் கண்டித்தும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுமி ஆசிஃபா விஷயத்தில் நாம் மனிதநேயத்தை மறந்து விட்டோம். நிச்சயமாக அவளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக பிரமுகர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதால், கொலை வழக்கை நீர்த்துப் போகச் சதி நடக்கலாம் என்றும் பலரும் சந்தேகங்களைக் கிளப்பி உள்ளனர்.
ஆசிஃபா தரப்புக்கு ஆஜராகக் கூடாது என்று வழக்கறிஞர் தீபிகா சிங்குக்கு சங்கிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு, சிறுமி ஆசிஃபா கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும் சக்தி வாய்ந்த கடவுளாக இந்துக்கள் கருதும் தேவிகாம்பாள் கண்களின் முன்னே இத்தனை கொடூரங்களும் நடந்துள்ளன.
கைகளில் சூலமும், வேலும் இருந்தும் ஏனோ அமைதியாக இருந்து விட்டாள் தேவி.
– பேனாக்காரன்