Wednesday, July 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

தொல்காப்பியப் பெயர்த்தி – கவிதை நூல் விமர்சனம்! சாதி வெறியர்களுக்கு இன்னொரு சாட்டையடி!!

இலக்கியம், புத்தகம், முக்கிய செய்திகள்
பூ-வ-ன-ம்   'தொல்காப்பியப் பெயர்த்தி' என்ற பெயரில் விரைவில் கவிதை நூல் வெளியிட இருப்பதாக இந்நூலாசிரியர் மழயிசை ஒருநாள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அப்போதுமுதல், அவரைவிடவும் இந்த நூலுக்காக பேரார்வத்துடன் காத்திருந்தேன். எனக்குத் தொல்காப்பியம் பிடிக்கும் என்பது மாத்திரமல்ல; வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. ஒன்று, தொல்காப்பியரின் பெயர்த்தி என்று சொல்லிக்கொள்ளும் அசாத்திய துணிச்சலும் ஒருவருக்கு இருக்கிறதா? என்ற வியப்பு; அடுத்து, மழயிசை என்ற நூலாசிரியரின் புனைப்பெயர். இரண்டு தனித்துவ அடையாளங்களும் எதிர்பார்ப்பை உண்டாக்கின. நூலின் தலைப்பிற்கேற்றவாறு தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நவீனத்தையும் இணைத்து நிகழ்கால சமூக அவலங்களை சாடியிருக்கிறார் மழயிசை. எல்லா புதுமுக படைப்பாளிகளும் பேசுகிற பாடுபொருள்களைத்தான் இந்நூலாசிரியரும் பேசுகிறார் என்றாலும், ...
எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!

எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மெட்ரோ நகரங்களில் மேல்வர்க்கத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் புதுவித போதை கலாச்சாரம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் எட்டிப்பார்க்கத் தொடங்கி இருப்பது, காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசுவுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளர் அம்பிகா தலைமையில் காவலர்கள் தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி அருகே, அண்மையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை தடுத்து, அவர்களிடம் பையை சோதனை செய்தபோது 2.60 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில் உள்ள பொருள்களை எடுத்து சோதித்தபோது, அதில் தபால்தலை வடிவத்தில் உள்ளங்கை அளவிலான ஒரு அட்டையைக் ...
ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்! ”மனிதனாக வாழ மதம் அவசியமா?”

சினிமா, முக்கிய செய்திகள்
'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்த ராஜூ முருகன் இயக்கத்தில், மார்ச் 6ம் தேதி வெளியாகி இருக்கிறது, 'ஜிப்ஸி'. தாய், தந்தையை இழந்த, நாடு முழுவதும் சுற்றி வரும் ஒரு நாடோடிக்கும், இஸ்லாமிய பழமைவாதங்களில் ஊறிப்போயிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குமான காதலையும், எதிர்பாராத மதக்கலவரத்தில் அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட விளைவுகளையும் பேசுகிறது, ஜிப்ஸி. சபாஷ் ராஜூ முருகன்!   கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் ஏதுமற்ற ஒரு சாமானியனின் பீதியடைந்த முகமும், அருகே கொலைவெறியுடன் கையில் வாளேந்தி நிற்கும் ஓர் இந்து பயங்கரவாதியின் படமும் அன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்ற காட்சியை, சமகால பிரச்னைகளுடன் கோத்து, கதை சொன்ன விதத்தில் ராஜூமுருகனின் சமூகப்...
மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பாடப்புத்தகத்தின் துணையின்றி தானாகவே சிந்தித்து எழுதும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு இருந்தது, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.   இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக...
திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள...
அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம்.   இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ...
நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கலை, இலக்கியத் துறைகளில் இயங்கி வரும் படைப்பாளிகள் தொடக்கத்தில் இருந்தே நடுவண் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடி வருகின்றனர். பாலிவுட்டில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர் மற்றும் அவருடைய சகாவும், பிரபல இயக்குநருமான மகேஷ் பட் ஆகியோர், மோடியை குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர்.   இந்நிலையில், அவர்கள் இருவரும் அல் ஜஸீரா செய்தி சேனலுக்கு வியாழனன்று (பிப். 13) அளித்த நேர்காணலில், மோடி மீது மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாவேத் அக்தர், 'சந்தேகமே இல்லாமல் மோடி ஒரு பாசிசவாதிதான்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,'' என...
வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.   வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார். சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்...
சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன். தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள்,'' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். கலைஞர் பாணியிலான அரசியலில் இருந்து சற்றே விலகி, ஜெ., மாடல் அரசியலுக்கு தயாராகி விட்டார் என்பதை, அப்போதே உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழுவில் கர்ஜித்தது, இப்போது அடுத்தடுத்து நடந்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகள் கழக கண்மணிகளை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர்.   முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை கடந்த ...
சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சூரியூர் பள்ளக்காடு கிராமம் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து திடீரென்று தொலைந்து போனதாக சொல்லப்பட, 28 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தைத் தேடும் பணிகளில் வனக்கிராம மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற...