Tuesday, October 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்...
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்; 6 லட்சம் கோடிகளுக்கு அதிபர்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பிரபல தொழில் சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து இந்தியாவின் நம்பர்-1 கோடீஸ்வரராக திகழ்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 6.12 லட்சம் கோடிகளுக்கு மேல் இருப்பதாக, ஹூரூன் ஆய்வேடு, மார்ச் 2ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.   இப்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தம் 209 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் 177 பேர் இந்தியாவில் வசிப்பதாகவும் மற்றவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் என்றும் ஹூரூன் ஆய்வேடு கூறுகிறது.   உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலின் பத்தாவது பதிப்பை பிரபல வணிக இதழான ஹூரூன் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) அன்று வெளியிட்டது. அதில்தான் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.   உலகம் முழுவதும் மொத்தம் 3228 பெரும் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 68 ந...
தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!

அரசியல், மதுரை, முக்கிய செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான, தோழர் தா.பாண்டியன் (88) உடல்நலக் குறைவால், வெள்ளிக்கிழமை (பிப். 26) இயற்கை எய்தினார்.   இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பிப். 24ம் தேதி அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   எனினும், அவருடைய உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. தீவிர சிகச்சை அளித்தும் பலன் அளிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை (பிப். 26) காலை 10.05 மணியளவில் அவர் உயிரிழந்தார்.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப...
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உர...
ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

ரயில்டெல் ஐபிஓ நாளை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகிறது!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஐபிஓ வெளியீடு வெற்றியடைந்துள்ளது. பொதுப்பங்குகள் வேண்டி சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 42.39 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. வெள்ளிக்கிழமை (பிப். 26) இந்நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது. ரயில்வே துறையின் ஓர் அங்கமான ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், ஒரு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வழங்குநர் ஆகும். இத்துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது.   இந்நிறுவனம், 819.24 கோடி ரூபாய் நிதி திரட்டும் நோக்கில் முதன்முதலாக பிப். 16ம் தேதி ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. மினிமம் லாட் சைஸ் 155 பங்குகள் ஆகும். ஒரு பங்கின் விலை 94 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.  ...
தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,...
நீ தெய்வம் தந்த அதிசயம்…!

நீ தெய்வம் தந்த அதிசயம்…!

சினிமா, முக்கிய செய்திகள்
(பனை ஓலை)   சில பாடல்கள், சில நிகழ்வுகள் நம்மையும் அத்துடன் ஒன்றச் செய்துவிடும். இளையராஜா, கண்ணதாசன், ஜென்சி ஆகியோரின் கூட்டணி அவர்களின் படைப்புகளுடன் நம்மை அடிக்கடி ஒன்றிப் போகச் செய்யும் மாயாஜாலங்களை அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன. அந்தக் கூட்டணி எப்போதும் வெற்றிக் கூட்டணியாக மட்டுமே அமைந்திருக்கின்றன. அவர்களின் ராஜாங்கத்தை யாரும் சதி செய்து கவிழ்த்து விட முடியாது. எப்போதும் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...' என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.   பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன்....
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின. பகல் 1.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் அதிகபட்சமாக 1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து 49971 புள்ளிகளும், நிப்டி 251 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.   நிப்டி காலையில் 14999 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதிகபட்சமாக 15010 புள்ளிகளை தொட்டது. குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள் வரை சரிந்தது. காலையில் 50910 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 50986 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 49860 புள்ளிகள் வரையிலும் சென்றன. மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1...
திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

அரசியல், முக்கிய செய்திகள்
திமுக சார்பில் ராசிபுரம்  தனித்தொகுதியில் போட்டியிட  மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த  ஒன்றியக்குழு 1வது வார்டு  கவுன்சிலரின் கணவர் முருகேசன், முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) விருப்ப மனு தாக்கல் செய்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கத்தை விட முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.   இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் போட்டியிட இம்முறை 20க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், விருப்பமனு படிவம் ...