Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுக சார்பில் ராசிபுரம் 
தனித்தொகுதியில் போட்டியிட 
மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த 
ஒன்றியக்குழு 1வது வார்டு 
கவுன்சிலரின் கணவர் முருகேசன்,
முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை
(பிப். 21) விருப்ப மனு
தாக்கல் செய்தார்.

 

தமிழக சட்டப்பேரவைத்
தேர்தல் தேதி விரைவில்
அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, வழக்கத்தை விட
முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள்
தேர்தல் பரப்புரையை
தொடங்கி விட்டன.

 

இந்நிலையில்,
திமுக சார்பில் தமிழகம்,
புதுச்சேரியில் போட்டியிட
விரும்புவோரிடம் இருந்து
விருப்பமனுக்கள் பெறும்
பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி
தொடங்கியது. 28ம் தேதி வரை
விருப்ப மனுக்கள்
பெறப்படுகின்றன.

 

நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் சட்டப்பேரவைத்
தனித்தொகுதியில் போட்டியிட
இம்முறை 20க்கும் மேற்பட்டோர்
ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும், விருப்பமனு படிவம்
விநியோகம் தொடங்கிய
முதல் நான்கு நாள்களில்
இத்தொகுதியில் போட்டியிட
விரும்பி ஒருவர்கூட
மனுத்தாக்கல் செய்யவில்லை.

 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரம் அருகே உள்ள
அவினாசிப்பட்டியைச் சேர்ந்த
முருகேசன் (49), ராசிபுரம்
தனித்தொகுதியில் போட்டியிட
முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை
(பிப். 21) திமுக தலைமையகமான
அண்ணா அறிவாலயத்தில்
விருப்ப மனுத்தாக்கல் செய்தார்.
திமுக நிர்வாகிகள் விருப்ப
மனுவைப் பெற்றுக் கொண்டு
ரசீது வழங்கினர். விருப்ப மனு
தாக்கலின்போது ராசிபுரம்
ஒன்றியம் கூனவேலம்பட்டி புதூர்
கிளைச் செயலாளர் சரவணன்
உடன் இருந்தார்.

 

முருகேசன், சொந்தமாக
கோன் பேப்பர் ஆலை, காலணி
தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.
எல்பிஜி டேங்கர் லாரிகள்
வைத்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு
வடமாநில தொழிலாளர்களை
பணிக்கு அமர்த்தும் அவுட்சோர்சிங்
பணிகளையும் செய்து வருகிறார்.

 

கொரோனா ஊரடங்கு
காலத்தில் மல்லசமுத்திரம் ஒன்றியம்,
ராசிபுரம் ஒன்றிங்களுக்கு
உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக
30 லட்சம் ரூபாய்க்கு மேல்
சொந்த செலவில் காய்கறிகளை
இலவசமாக வழங்கினார்.
ராசிபுரம் அருகே, 12 காமுகர்களால்
சீரழிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின்
குடும்பத்தை தத்தெடுத்து
பராமரித்து வரும் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி,
மல்லசமுத்திரம் ஒன்றியம்
1வது வார்டு உறுப்பினராக
உள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: