‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.
டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.
பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா...